பிரிட்டன் ராணியாக வெறும் 21 வயதில் இரண்டாம் எலிசபெத் 2ஆம் உலகப் போர் முடிந்த பின்பு முக்கியமான காலகட்டத்தில் பிரிட்டன் நாட்டின் ராணியாக அரியணை ஏறினார்.
ராணி எலிசபெத் கடந்த சில நாட்களாகவே மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையிலும், புதிதாகப் பிரதமராக அறிவிக்கப்பட்டு உள்ள Liz Truss-ஐ எலிசபெத் சந்தித்தார். இந்நிலையில் ராணி எலிசபெத் தனது 96 வயதில் காலமானார்.
முழு உலகமும் ராணியின் மரணத்திற்குத் தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ராணி எலிசபெத்-க்கு கிடைத்த ‘அந்த’ சலுகை புதிய மன்னர் சார்லஸ்-க்கும் கிடைக்குமா..?
ராணி எலிசபெத்
இந்நிலையில் பிரிட்டன் ராணியான எலிசபெத் மறைவை நினைவுகூரும் வகையில் அவர் தொடர்பான சில பொருட்களைச் சிலர் ஏலம் விட முயற்சி செய்தனர். அதில் ஒன்று தற்போது இணையத்தில் பெரிய அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது.
டீ பேக்
1990-களில் எலிசபெத் ராணி தேநீர் குடிப்பதற்காகப் பயன்படுத்திய ஒரு டீ பேக் ஏலம் விடப்பட்டு உள்ளது. இந்தப் பயன்படுத்திய டீ பேக் வீண்ட்சார் அரண்மனையில் இருந்து கடத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
9.5 லட்சம் ரூபாய்
இந்த டீ பேக் நேற்று ஈபே தளத்தில் ஏலம் விடப்பட்ட நிலையில் பல விருப்பம் தெரிவித்துப் பிட்டிங் செய்யப்பட்ட நிலையில், இந்க பயன்படுத்தப்பட்ட லிப்டான் டீ பேக் சுமார் 12,000 டாலருக்கு ஏலம் விடப்பட்டு உள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 9.5 லட்சம் ரூபாய்.
சிஎன்என் தொலைக்காட்சி
ஈபே தளத்தில் Celebrity Memorabilia Queen Elizabeth II Regina Britannia Teabag Extremely Rare என்ற தலைப்பில் ஏலம் விடப்பட்டது. இது 1998 ஆம் ஆண்டுச் சிஎன்என் தொலைக்காட்சியில் இதன் புகைப்படம் இடம்பெற்றது.
500 மில்லியன் டாலர் சொத்து
ராணி எலிசபெத் தனது முதலீடுகள், கலை சேகரிப்பு, நகைகள் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் ஆகியவற்றின் மூலம் சுமார் 500 மில்லியன் டாலருக்கும் அதிகமான தனிப்பட்ட சொத்துக்களை வைத்துள்ளார். அவரது மறைவிற்குப் பின்பு இளவரசர் சார்லஸ் அரியணை ஏறிய நிலையில் பெரும்பாலான சொத்துக்கள் அவருக்குக் கொடுக்கப்படும்.
Lipton Teabag Used By Queen Elizabeth II Sold For Rs 9.5 Lakh on eBayLipton Teabag Used By Queen Elizabeth II Sold For Rs 9.5 Lakh on eBay
Lipton Teabag Used By Queen Elizabeth II Sold For Rs 9.5 Lakh on eBay எலிசபெத் ராணி பயன்படுத்திய டீ பேக்.. 10 லட்சத்திற்கு ஏலம்..!