பெங்களூர் மழை மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் நிறுவனங்கள், உள்கட்டமைப்புத் துறை, மாநில அரசு, மத்திய அரசு, சர்வதேச நிறுவனங்கள் என அனைத்து மட்டத்திலும் பல விவாதங்களை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் பெங்களூரில் ஒரு இளைஞன் காஃபி ஷாப்பில் ஆஃபீஸ் செட்டஅப்-ஐ உருவாக்கியது பெரும் தாக்கத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் மழை மக்களின் வீடுகளைச் சூறையாடியது மட்டும் அல்லாமல் பலரின் வேலைவாய்ப்புகளையும் இக்கட்டான சூழ்நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.
இதில் ஒரு புகைப்படம் தான் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மழை நின்றும் சோகத்தில் பெங்களூர் மக்கள்.. லட்சம் லட்சமாகப் பணம் கரைகிறது..!
பெங்களூர் மழை
பெங்களூர் மழை காலத்தில் அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் இருக்கும் பெரும்பாலான அலுவலகங்கள் மழை நீரிவ் மூழ்கியிருக்கும் வேளையில், எகோஸ்பேஸ் பகுதியில் இருக்கும் பெண் ஊழியர் ஒருவர் அலுவலகத்திற்குச் செல்ல முடியாத காரணத்தால் சாலையைக் கடக்கப் பயன்படுத்தும் பாலத்தின் மீது அமர்ந்து பணியாற்றிய போட்ட வைரல் ஆனாது மறக்க முடியாது.
காஃபி ஷாப்
தற்போது இதையே தூக்கிச் சாப்பிடும் வகையில் பெங்களூரில் Third Wave Coffee என்னும் காஃபி ஷாப்பில் ஒரு அலுவலகத்தைச் சேர்ந்த பலர் தீவிரமாகப் பணியாற்றி வருவது போட்டோ டிவிட்டரில் டிரெண்டாகியுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அதில் ஒருவர் டெஸ்க் டாப் வைத்து பணியாற்றி வருகிறார்.
பெங்களூரின் உச்சம்
இது தான் பெங்களூரின் உச்சம் எனப் பல டிவிட்டரில் கலாய்த்து வருகின்றனர், இந்தக் காஃபி ஷாப்பில் இருப்பவர்களின் அலுவலகம் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ள நிலையில் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர் என இந்தப் போட்டோவை போஸ்ட் செய்தவர் தெரிவித்துள்ளார்.
விமர்சனம்
காஃபி ஷாப்பில் பணியாற்றுவது என்பது பெரிய விஷயம் அல்ல ஆனால் கொட்டும் மழையில் வீட்டில் வேலை செய்ய அனுமதிக்காத நிறுவனத்திற்கு, காஃபி ஷாப்பில் டெக்ஸ்டாப் வைத்து பணியாற்றி வருகிறார், இது எத்தனை கொடுமையானது எனவும் விமர்சனம் செய்துள்ளனர். மேலும் பலர் இதை toxic “hustle culture” எனவும் விமர்சனம் செய்துள்ளனர்.
Bengaluru employee SetUp Desktop at Coffee Shop to work at peak rainy time
Bengaluru employee SetUp Desktop at Coffee Shop to work at peak rainy time காஃபி ஷாப்பில் ஆஃபீஸ்.. பெங்களூர் இளைஞர்கள் மழையால் திண்டாட்டம்..!