கொழும்பில் ATM அட்டை பயன்படுத்தும் மக்களுக்கு எச்சரிக்கை



கொழும்பில் பல்வேறு பகுதிகளில் வங்கிகளின் தானியங்களில் பணம் கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

8 அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு சொந்தமான ATMகளுக்கு பலமுறை வந்து நுட்பமான முறையில் பலரின் ATM அட்டைகளில் பணம் திருடியவர் கடுவெல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடுவெல பிரதேசத்தில் உள்ள ATMகளில் நபர் ஒருவர் பல்வேறு நபர்களின் ATM அட்டைகளை மோசடியான முறையில் திருடுவதாக பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. அதற்கமைய, அந்தந்த வங்கிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

ATM இயந்திரம் 

ATM நிலையங்களுக்கு அருகே வரும் நபர் தனது அட்டை இயந்திரத்தில் சிக்கியதாகவும், அதனை பெற வங்கிக்கு அழைப்பேற்படுத்த வேண்டும் என கூறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வங்கியின் இலக்கத்தை பெற அங்கு வரும் மக்களின் அட்டையை அவர் பெற்றுக் கொண்டுள்ளார். அதன் பின்னர் அந்த அட்டைக்கு சமமான வேறு அட்டை ஒன்றை வழங்கிவிட்டு சந்தேக நபர் அங்கிருந்து சென்றுவிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் திருடப்பட்ட அட்டையை பயன்படுத்தி வேறு ATM இயந்திரத்தில் இருந்து பணம் முழுவதையும் எடுத்துள்ளார். பல வங்கிகளில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து சந்தேக நபரை கடுவெல பொலிஸார் கைது செய்தனர்.

வங்கியில் கொள்ளை

சந்தேகநபர் மல்வான மற்றும் சேதாவத்தை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் எனவும் தெரியவந்துள்ளது. அவர் போதைப்பொருளுக்கு அடிமையான 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடமிருந்த 8 வங்கிகளுக்கு சொந்தமான 30 அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில் மாலபே, பியகம உள்ளிட்ட பல பிரதேசங்களில் 40 தடவைகளில் இந்த அட்டைகளை பயன்படுத்தி 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.