சர்க்கரை நோய்க்கு மருந்து உண்டு வந்தாலும், இயற்கையான வழிகளில் சர்க்கரையை கட்டுப்படுத்த பலரும் பலவித முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக உடலுக்கு தீங்கு விளைவிக்காத, பக்கவிளைவு ஏற்படுத்தாத வழிமுறைகளை பின்பற்ற விரும்புவோம். அந்தவகையில்
நடைப்பயிற்சி மேற்கொள்வது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஊட்டச்சத்து நிபுணர் ஆங்கி ஆஷே கூறுகையில், “நீங்கள் உணவை உண்ணும்போது, உங்கள் உடல் கார்போஹைட்ரேட்டுகளை ரத்த சர்க்கரையாக உடைக்கத் தொடங்குகிறது. நடைப்பயிற்சி மற்றும் பிற வகையான உடற்பயிற்சி செய்வது இன்சுலின் திறனை அதிகரிக்க உதவுகிறது” என கூறுகின்றனர்.
நடைப்பயிற்சி உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. ரத்த சர்க்கரை அளவு குறைவதற்கு வழிவகுக்கிறது. நடைப்பயிற்சி அனைவருக்கும் சிறந்ததாக உள்ளது.
நீரிழிவு நோய் இல்லாதவர்களிடையே கூட உயர் ரத்த சர்க்கரை வெளிப்படுத்துவது இதய நோய் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கும் என நிபுணர் கார்டெல் கூறுகிறார். சர்க்கரை உள்ளவர்கள் அவர்களின் ரத்த சர்க்கரை அளவை முறையாக நிர்வகிப்பது அவசியம். சர்க்கரை அளவு அதிகமாகவோ, குறைவாகவோ இருத்தல் கூடாது. இது பல்வேறு செயல்பாடுகளை பாதிக்கும். கண், சிறுநீரகம், நரம்பு பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர்.
அமெரிக்க நீரிழிவு சங்கம் கூறுகையில், “ஒரு முறை முறையான உடற்பயிற்சி ரத்த சர்க்கரையை 24 மணிநேரம் வரை கட்டுப்படுத்த உதவுகிறது. இருப்பினும் இது தீவிரத் தன்மையை பொறுத்தது” என்கின்றனர்.
உடற்பயிற்சி செய்யும் போது, உண்மையில் ரத்த சர்க்கரை அளவு, இன்சுலின் செயல் திறன் மேம்படுகிறது. ஓரிரு நிமிட உடற்பயிற்சி கூட உதவுகிறது. சர்க்கரை உள்ளவர்களுக்கு உடற்பயிற்சி சிறந்த மருந்து. , ஏனெனில் இது ஒருவரின் ரத்த சர்க்கரையை இயற்கையாக குறைக்க உதவுகிறது. நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சி இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. அதாவது குளுக்கோஸை மிகவும் திறம்பட பயன்படுத்த உடல் அனுமதிக்கிறது, இதனால் ரத்த சர்க்கரை அளவு குறைகிறது.
அதிக பலன் கிடைக்க சாப்பிட்ட பிறகு, முடிந்தால் 60 முதல் 90 நிமிடங்கள் கூட நடக்கலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்போது இது உதவியாக இருக்கும் என்று கார்டெல் கூறுகிறார். சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுவதாக இருந்தாலும், நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் எளிய பயிற்சியாகும் என்று ஆஷே கூறுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“