உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முகாமின் உச்ச நீதிமன்ற விசாரணை மனுக்களுக்கு மத்தியில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, இந்திய தலைமை நீதிபதி யு.யு.லலித்துடன் மேடையில் பங்கேற்றதற்கு மஹா விகாஸ் அகாடி (MVA) கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சிவசேனா மற்றும் காங்கிரஸுடன் இணைந்து MVAவில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல், ஒரு ட்வீட்டில், “ஏக்நாத் ஷிண்டே அரசாங்கத்தின் சட்டபூர்வமான தன்மையை சவால் செய்யும் தீவிர வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்சால் விசாரிக்கப்பட்டு வருகிறது.” ”அப்படிப்பட்ட சூழலில், ஏக்நாத் ஷிண்டே இந்திய தலைமை நீதிபதியுடன் மேடையை பகிர்ந்து கொள்வது முறையற்றது. இது நெறிமுறைப்படி இல்லை, என பதிவிட்டு உள்ளார். மும்பையில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி லலித்க்கு சனிக்கிழமையன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதையும் படியுங்கள்: டெல்லி போக்குவரத்து கழக ஊழல் புகார்; சி.பி.ஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுனர் ஒப்புதல்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிராவின் “மகன்” இந்தியாவின் தலைமை நீதிபதியாகியது மாநிலத்திற்கு பெருமையான தருணம் என்று கூறியிருந்தார்.
சனிக்கிழமையன்று நடந்த நிகழ்ச்சியின் படங்களை வெளியிட்டு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் ட்விட்டரில், “ஷிண்டே-ஃபட்னாவிஸ் அரசாங்கத்தின் சட்டபூர்வமான தன்மையை மாண்புமிகு உச்சநீதிமன்றம் பரிசோதிக்கும் போது, தற்போதைய மாநில அரசு மட்டுமல்ல, அதற்குத் தலைமை தாங்கும் நபரும் தகுதி நீக்கம் செய்யப்படலாம். டெய்ஸ் பொருத்தமற்றதாகத் தெரிகிறது.” என்று பதிவிட்டார். சிவசேனா செய்தித் தொடர்பாளர் அரவிந்த் சாவந்த், விதிமுறைகள், விதிகள் மற்றும் சட்டத்தின்படி இந்த நாட்களில் எதுவும் நடக்கவில்லை என்று கூறினார்.
மேலும், ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக நாங்கள் கூறுவதற்கு இதுவே காரணம் என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா தலைமைக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே ஒரு கிளர்ச்சிக்கு தலைமை தாங்கினார், இதன் விளைவாக தாக்கரே தலைமையிலான MVA அரசாங்கம் சரிந்தது.
பின்னர், ஜூன் 30 ஆம் தேதி ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றார், மேலும் பா.ஜ.க.,வின் தேவேந்திர ஃபட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார்.
சிவசேனா மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிரிவினர், கட்சி விலகல், இணைப்பு மற்றும் தகுதி நீக்கம் தொடர்பான பல்வேறு அரசியல் சாசன கேள்விகளை எழுப்பி தாக்கல் செய்த மனுக்களை, ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் பரிந்துரைத்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil