‘திராவிடப் போர்வாள்' எனச் செருக்களத்தில் கொள்கைப் பகைவர் கூட்டத்தை எதிர்ப்பவர் வைகோ..! – முதல்வர் ஸ்டாலின் புகழாரம்..!

‘மாமனிதன் வைகோ’ எனும் ஆவணப்படம் சத்யம் திரையரங்கில் இன்று மாலை வெளியிடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் ” வைகோ ரியல் ஹீரோ மட்டுமல்ல, கொள்கை ஹீரோ, லட்சிய ஹீரோ, தியாகத்தால் உருவான ஹீரோ, எழுச்சிமிக்க ஹீரோ, உணர்ச்சி மிக்க ஹீரோ, போராளி ஹீரோ உயரத்தில் மட்டுமல்ல, கொள்கை, லட்சியம், தியாகத்திலும் உயர்ந்தவர் வைகோ என புகழாரம் சூட்டினார். மாணவரணியில் இருந்தபோது வைகோவிடம் தேதி கேட்டு கூட்டம் நடத்தியவன் நான். நெருக்கடி காலத்தில் சிறைகளில் இருந்த அனைவருக்கும் வைகோ கடிதங்கள் எழுதி உற்சாகப்படுத்தினார்.
பொடாவில் கைதாகி சிறையில் இருந்த வைகோ, குகையில் இருந்த சிங்கம் போல் இருந்தார். கருணாநிதி சொல்லியனுப்பினார் என்ற போது, படித்து பார்க்காமையிலேயே, தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் வைகோ. பிரச்சாரக்கூட்டங்கள், மாநாடுகளில் உணவு நேரத்தில் தான் பேசுவார் வைகோ. அப்போது தான் கூட்டம் கலையாது என கூறினார்.
வைகோவின் அரசியல் வாழ்வை பேச நேரமில்லை என்றும் அவரது வாழ்க்கையை பேசிக்கொண்டே செல்லலாம் என்றும் முதலமைச்சர் கூறினார். எழுச்சி, உணர்ச்சியுடன் நமக்கெல்லாம் மிகப்பெரிய பாடமாக வைகோவின் வாழ்க்கை பற்றிய ஆவணப்படத்தை உருவாக்கித்தந்துள்ள துரை வைகோவை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்றார். கருணாநிதி உடல்நலம் குன்றி வீட்டில் இருந்தபோது, அவரைப் பார்க்க வந்த வைகோவை, கருப்புத்துண்டை வைத்து கருணாநிதி அடையாளம் கண்டுகொண்டார்.
கருணாநிதியிடம் உங்களுக்கு பக்கபலமாக இருந்தது போல், ஸ்டாலினுக்கும் இருப்பேன் என வைகோ கூறினார். அதேபோல், வைகோவுக்கு துணையாக நானும் இருப்பேன். அவரது உடல் நலன் எனக்கு மட்டும் இல்லை இந்த நாட்டுக்கே முக்கியம். அதனால் தான் மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவை செல்லுங்கள் என கூறினேன்.” என்று தனது உரையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இந்த நிகழ்வில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி , கவிஞர் வைரமுத்து , அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.