இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துகுடி மாவட்டம், சுந்தரவேலபுரம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். அவர் அவரது நண்பற் ஆசிக் மற்றும் மாரிசெல்வத்துடன் இருசக்கர வாகனத்தில் முத்தியாபுரத்தில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது தூத்துகுடி – திருச்செந்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி இருசக்கர வாகனம் அங்குள்ள மின்கம்பத்தில் சாய்ந்தது.
அப்போது, அரசு பேருந்து பேருந்து அவர்கள் மோதியது. இதில், விக்னேஷ் மற்றும் ஆசிக் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த மாரிச்செல்வனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.