சென்னை : பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகையின் மரண செய்தி கேட்டு உறைந்து போனேன் என நடிகை கஸ்தூரி உருக்கமாக கூறியுள்ளார்.
எழுத்தாளர் தூரிகை கபிலன் பெண்களுக்காக ‘Being Women’ என்ற பத்திரிகையை நடத்தி வந்ததோடு காஸ்டியூம் டிசைனராகவும் இருந்துள்ளார்.
அதே போல, பிரபல வசந்தபாலன் இயக்கிய அநீதி படத்தில் காஸ்டியூம் டிசைனராக அறிமுகமானார்.
கபிலன்
இந்நிலையில்,நேற்றிரவு கபிலனின் அன்புமகள் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் தொங்கியநிலையில் சடலமாக அவரது உடலை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது, அவரது உடல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதுதான் காரணமா?
திருமணம் செய்ய கொள்ளும் படி பெற்றோர் தொடர்ந்து வற்புறுத்தி உள்ளனர். ஆனால், அவருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், அடிக்கடி வீட்டில் சண்டையும் நடந்துள்ளது. எவ்வளவோ எடுத்து சொல்லியும் திருமணம் வேண்டாம் என்ற முடிவில் தூரிகை உறுதியாக இருந்ததாக கபிலன் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பயமுறுத்திப்பார்க்க
தற்கொலைக்கு எதிராக பலகுரல்களை எழுப்பியவர் தூரிகை, தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் இல்லை தூரிகை. பெற்றோரை பயமுறுத்திப் பார்க்கத்தான், எப்படியும் காப்பாற்றிவிடுவார்கள் என்று அப்படிச் செய்துள்ளார். ஆனால், அதுவே வினையாகிவிட்டது என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார் கபிலன்.
உருக்கமான பதிவு
தூரிகை கபிலனின் தற்கொலை செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த நடிகை கஸ்தூரி, தனது ட்விட்டர் பக்கத்தில், கவிஞர் கபிலன் அவர்களின் மகள் மரணம் என்ற துயர செய்தி கேட்டு உறைந்து போயுள்ளேன். கண்களில் மின்னல், முகத்தில் புன்னகை…. அந்த அழகு பெண் எதற்கு தன்னை தானே மாய்த்து கொள்ள வேண்டும்? தற்கொலை எப்போதுமே எதற்குமே முடிவல்ல… பிரச்சினைகளின் ஆரம்பம். எனது அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என உருக்கமாக பகிர்ந்துள்ளார்.