கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் எச்சரிக்கையை மீறி குளிக்க சென்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2பேரை போலீசார் கயிறு மூலமாக பத்திரமாக மீட்டனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த வினோத் மற்றும் ரவி உள்பட குடும்பத்தினர் 10 பேர் நேற்று மாலை 6 மணி அளவில் தென்பெண்ணை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது அதிகப்படியான நீர் வரத்தின் காரணமாக இவர்கள் இருவரும் சுமார் ஆற்றில் 300 மீட்டர் அளவிற்கு அடித்துச் செல்லப்பட்டு நடுவில் இருந்த மோட்டார் பம்ப் சிமெண்ட் கட்டை மீது ஏறி தங்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர்.
இதனை அறிந்த மணலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கயிறு மற்றும் ட்யூப் மூலமாக இருவரையும் பத்திரமாக மீட்டனர்.