இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் விமான விபத்தில் இருந்து அவர் தப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து வருவதால் விலைவாசி கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் துயரங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் நாட்டின் அப்போதைய பிரதமரான இம்ரானுக்கு நெருக்கடி அதிகரித்தது.
பொருளாதாரம் சீர்குலைந்து வருவதை தடுப்பதற்காக எவ்வித முயற்சிகளையும் செய்யாத இம்ரான்கான் மீது இது தொடர்பாக குற்றம் சாட்டி எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து, அவரை ஆட்சியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டார்.
இம்ரான் கான்
பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ஆட்சி கவிழ்ந்த நிலையில் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் புதிய அதிபராக ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றார். அப்போது முதலே இம்ரான் கானுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆளும் கட்சி சுமத்தி வருகிறது.

உயிருக்கு ஆபத்து?
இதனிடையே இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கடுமையாக குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பயணித்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும் இதை அடுத்து அவர் விமான விபத்தில் இருந்து தப்பித்துள்ளதாக வந்துள்ள செய்திகள் பரபரப்பை கூட்டியுள்ளன.

விமானம் தரையிறக்கம்
பாகிஸ்தான் நாட்டிலுள்ள குஜரன்வாலா நகர் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் அந்நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்திலிருந்து நேற்று முன்தினம் தனி விமானத்தில் புறப்பட்டு இருக்கிறார். அவர் பயணித்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் இஸ்லாம் விமான நிலையத்திற்கு திரும்பியது. விமானத்தின் விமானி கட்டுப்பாட்டு அடைய தொடர்பு கொண்டு விமானத்தை அவசரமாக தரையிறக்கி இருக்கின்றார்.

என்ன காரணம்?
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அல்லது மோசமான வானிலை காரணமாக இம்ரான் கான் பயணித்த விமானம் தரை இறக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கம் நடைபெறவில்லை எனவும் மோசமான வானிலை காரணம் இதன் காரணமாகவே விமானம் அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது என இம்ரான் கான் கட்சியின் மூத்த தலைவர் கூறியிருக்கிறார். ஆனால் இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு வெளி உலகத்திற்கு தெரிய வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.