நேபாளத்தில் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு.. நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி!

யை ஒட்டியுள்ள நேபாளத்தின் தர்சுலா மாவட்டத்தில் பெய்த கனமழையால், ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

கடந்த இரு நாட்களாக அங்கு கொட்டித்தீர்க்கும் கனமழையால் மஹாகாளி, லாஸ்கு நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

மழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், மாயமான 7 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களை தேடும் பணியில் நேபாள போலீஸாரும், ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.