பாகிஸ்தானில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்துக்கள் கோயில் கதவைத் திறந்து மனித நேயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
பலுசிஸ்தானில் கச்சி மாவட்டத்தில் உள்ள ஜலால் கான் என்ற கிராமம் மழை வெள்ளம் காரணமாக மாகாணத்தின் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு உள்ள இந்துக்கள் மனிதநேயம் மற்றும் மத நல்லிணக்க அடிப்படையில் இந்து கோயிலின் கதவுகளை திறந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக டான் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.