பாகிஸ்தானை அம்போன்னு கைவிட்ட சீனா.. என்ன நடந்தது..!

பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் கொரோனா தொற்றுக்கு முன்பில் இருந்தே மோசமான நிலையில் இருந்த, இதற்கிடையில் கொரோனா தொற்றுப் பாதிப்பு, ஆட்சி மாற்றம் எனப் பல பிரச்சனைக்கு மத்தியில் எரிபொருள் விலை உயர்வு ஆகியவை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

குறிப்பான மின்சார உற்பத்தி தளத்தை இயக்கக் கூட எரிபொருள் இல்லாமல் 10க்கும் அதிகமான மின் உற்பத்தி தளத்தைப் பாகிஸ்தான் அரசு மூடியிருந்தது. இப்படியிருக்கும் நிலையில் தான் பாகிஸ்தான் அரபு நாடுகள், சீனா, ஆப்கானிஸ்தான், ஐஎம்எப் உட்படப் பல நாடுகளில் உதவியை நாடியிருந்தது.

இப்படிச் சீனா நாட்டையும், சீனா பொறியிளார்களையும் நம்பி கொடுத்த ஒரு விஷயத்தை முழுமையாகச் செய்யாமல் பாகிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளது.

முதலீட்டாளர் விசா-வை நிறுத்த போகும் ஆஸ்திரேலியா.. சீனர்கள் தான் பிரச்சனையா..?

POK பகுதி

POK பகுதி

POK பகுதியில் இருக்கும் 969 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நீலம் – ஜீலம் ஹைட்ரோபவர் ஆலையை ரிப்பேர் செய்ய வந்த சீன இன்ஜினியர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளூர் மக்கள் தொடர் போராட்டத்தின் காரணமாகவும், அதை உள்ளூர் காவல் துறை கட்டுப்படுத்த முடியாத காரணத்திற்காகவும் பாகிஸ்தானை விட்டு வெளியேறியுள்ளனர்.

எரிபொருள் பற்றாக்குறை

எரிபொருள் பற்றாக்குறை

2022 ஜூலை மாதம் பாகிஸ்தான் நாட்டின் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக நீலம் – ஜீலம் ஹைட்ரோபவர் ஆலையைத் தற்காலிகமாகப் பாகிஸ்தான் அரசு முடக்கியது. இந்நிலையில் இதைச் சரி செய்யவும், மீண்டும் இயக்கவும் பாகிஸ்தான் அரசு சீனா அதிகாரிகளின் உதவியை நாடியது.

பாகிஸ்தான்
 

பாகிஸ்தான்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் உள்ள முசாஃபராபாத் அருகே இந்த ஆலை அமைந்துள்ளது, மேலும் இந்த ஆலையில் ஒரு முக்கியமான டனல்-ஐ திறக்க சீன பொறியாளர்கள் பணியாற்றினர். 508 பில்லியன் மதிப்பிலான நீர்மின் திட்டம் பயன்பாட்டுக்கு வந்து மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டது.

சீனா - பாகிஸ்தான்

சீனா – பாகிஸ்தான்

நீலம்-ஜீலம் ஆலை தவிரத் தாசு மற்றும் முகமண்ட் மின் திட்டங்கள் தொடர்பாகப் பாகிஸ்தான் சீன கூட்டுத் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் இடையே கடுமையான வேறுபாடுகள் உள்ளதும் இந்தப் பிரச்சனையின் போது தெரிய வந்துள்ளது. இதனால் இந்த 3 ஹைட்ரோபவர் ஆலையை இயக்குவது எப்படி எனக் கேள்வி தற்போது எழுந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Chinese engineers and staff abandon Neelum-Jhelum hydropower project in Pakistan POK region

Chinese engineers and staff abandon Neelum-Jhelum hydropower project in Pakistan POK region பாகிஸ்தானை அம்போன்னு கைவிட்ட சீனா.. என்ன நடந்தது..!

Story first published: Sunday, September 11, 2022, 19:40 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.