பாக்ஸ் ஆபிஸில் நூறு கோடி வசூலை நெருங்கும் பிரம்மாஸ்திரம்: நிம்மதி பெருமூச்சு விடும் பாலிவுட்

மும்பை: ரன்பீர் கபூர், ஆலியா பட, அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ள பிரம்மாஸ்திரம் திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியானது.

அயன் முகர்ஜி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பிரம்மாஸ்திரம் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ள பிரம்மாஸ்திரம் படத்தின் வசூல் பாலிவுட்டுக்கு நம்பிக்கையளித்துள்ளது.

நம்பிக்கை கொடுத்த பிரம்மாஸ்திரம்

கொரோனாவுக்குப் பிறகு இந்தியில் வெளியான திரைப்படங்கள், பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ‘காஷ்மீர் ஃபைல்’ தவிர மற்ற படங்கள் எல்லாம், மிகப் பெரிய தோல்வியைத் தழுவின. மேலும், வசூலிலும் மிக மோசமான அடிவாங்கி, பெருத்த நஷ்டத்தை கொடுத்தது. இதனால், பாலிவுட் நட்சத்திரங்கள் கதிகலங்கி நின்றனர். அவர்களுக்கு எதிராக நெட்டிசன்கள் தொடர்ந்து பாய்காட் செய்துவந்தது, நிலைமையை இன்னும் மோசமாக்கியது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை (செப் 9) வெளியான பிரம்மாஸ்திரம் திரைப்படம் புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

பாய்காட் பிரசாரத்தைக் கடந்த வெற்றி

பாய்காட் பிரசாரத்தைக் கடந்த வெற்றி

இந்தி திரையுலகம் சந்தித்து வரும் பாய்காட் சர்ச்சையில், அமீர்கான், அக்சய் குமார், ரன்வீர் சிங், கங்கனா ரணாவத் என பலரும் பாதிக்கப்பட்டனர். இதனால் அமீர்கானின் லால் சிங் சந்தா படம் மிகப் பெரிய இழப்பை சந்தித்தது. இதனிடையே ரன்பீர் கபூரின் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள பிரம்மாஸ்திரம் படமும் பாய்காட் செய்யப்பட்டது. “மாட்டுக்கறி சாப்பிடுவேன்” என சில வருடங்கள் முன் ரன்பீர் கபூர் பேசியிருந்த வீடியோவை வைரலாக்கி, பிரம்மாஸ்திரம் படத்தை பாய்காட் செய்தனர். மேலும், உஜ்ஜைனியில் உள்ள காளியின் கோயிலுக்குள் செல்லவிடாமலும் அவர்களை புறக்கணித்தனர். இந்நிலையில், தற்போது பாய்காட் பிரசாரத்தை கடந்து பிரம்மாஸ்திரம் வசூலில் கலக்கி வருகிறது.

பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை நெருங்குகிறது

பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை நெருங்குகிறது

பிரம்மாஸ்திரம் படம் இதுவரை 75 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் கரண் ஜோஹர் நேற்று அறிவித்திருந்தார். பாலிவுட் சினிமா வட்டாரங்கள் தவிர ஆந்திராவில் முதல் நாளில் சுமார் 6 கோடி ரூபாய் வசூலித்துள்ளது பிரம்மாஸ்திரம். இது அமீர்கானின் தூம் 3 திரைப்படத்தின் வசூலை விட அதிகம், தூம் 3 4 கோடி வசூல் செய்திருந்தது. அதேபோல், உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிரம்மாஸ்திரம், முதல் வாரத்தில் 100 கோடி வசூலை கடந்துவிடும் என, சினிமா ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

நிம்மதி பெருமூச்சு விடும் பாலிவுட்

நிம்மதி பெருமூச்சு விடும் பாலிவுட்

பாய்காட் பிரசாரத்தைக் கடந்து பிரம்மாஸ்திரம் திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது., இந்தித் திரையுலகை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. சமீபத்தில் வெளியான அமீர்கானின் லால் சிங் சந்தா, அக்சய் குமாரின் பிருத்விராஜ், ரக்‌ஷா பந்தன் படங்கள் படுதோல்வியடைந்தன. இதனால், பிரம்மாஸ்திரம் படத்தின் வசூல் குறித்தும் அச்சம் நிலவியது. ஆனால், முதல் வாரத்தில் 100 கோடியை நெருங்கியுள்ள பிரம்மாஸ்திரம் திரைப்படம், பாலிவுட்டுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.