பாதாம் பருப்பை திருடியதாக சிறுவனை மரத்தில் கட்டி சரமாரி அடி: மபி மதகுரு வெறிச்செயல்

சாகர்: மத்தியப்பிரதேசத்தின் சாகர் பகுதியில் ஜெயின் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பூஜைக்கு வைத்திருந்த பாதாம் பருப்பை 11வயது சிறுவன் யாருக்கும் தெரியாமல் எடுத்துவிட்டதாக தெரிகின்றது. இதனை பார்த்த மத குரு ராகேஷ் ஜெயின் சிறுவனை பிடித்து மரத்தில் கட்டிவைத்துள்ளார். மேலும் சிறுவனை அவர் சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். சிறுவன் தன்னை விட்டுவிடும்படி கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனிடையே தகவல் அறிந்த சிறுவனின் தந்தை அவனை மீட்டதோடு சம்பவம் குறித்து மோதிநகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட மத குரு ராகேஷ் ஜெயின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் கைது செய்யவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.