மறைந்த இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் உடல் ஸ்காட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் இருந்து லண்டனுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. வழிநெடுகிலும் பொதுமக்கள் நின்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ராணி எலிசபெத்தின் உடல் நாளை செயின்ட் கிலேஸ் கதீட்ரல் தேவாலயத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. ஊர்வலத்தில் பங்கேற்கும் அரச குடும்பத்தினர், ராணியின் உடலை பெற்றுக் கொள்கின்றனர்.
இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் ராணியின் உடல் எடின்பர்க்கில் இருந்து தனி விமானத்தில், இங்கிலாந்தின் நார்த்ஹோல்ட் நகருக்கு கொண்டு வரப்படுகிறது.பின்னர் சாலை மார்க்கமாக ராணியின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.தொடர்ந்து, அவரது உடல் குயின்ஸ் கார்டன், நாடாளுமன்ற வீதி, நாடாளுமன்ற சதுக்கம் வழியாக வெஸ்ட் மினிஸ்டர் ஹாலுக்கு கொண்டு செல்லப்பட்டு, 4 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணி எலிசபெத்தின் உடலுக்கு ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.