புறமுதுகிட்டோடும் ரஷ்யா… முக்கிய நகரங்களை மீட்டெடுத்த உக்ரைன்

துருப்புகள் பின்வாங்கியுள்ளதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்துள்ளது

உக்ரைன் தற்போது ரஷ்யாவிலிருந்து 2,000 சதுர கிமீ நிலப்பரப்பை விடுவித்துள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி

உக்கிரமான எதிர் தாக்குதல் உக்ரேனிய துருப்புகளுக்கு மேலும் பலன்களை ஈட்டியுள்ளதால், முக்கிய கிழக்கு நகரங்களில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கியுள்ளன.

ரஷ்ய துருப்புகளுக்கு உணவு மற்றும் ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்ட Kupiansk நகரில் உக்ரைன் துருப்புகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

புறமுதுகிட்டோடும் ரஷ்யா... முக்கிய நகரங்களை மீட்டெடுத்த உக்ரைன் | Russian Forces Retreat Ukraine Takes Key Towns

@reuters

இந்த நிலையில், துருப்புகள் பின்வாங்கியுள்ளதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்துள்ளதுடன், எதிர் தாக்குதலுக்கு தயாராகவே பின்வாங்கியதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், இன்னொரு முக்கிய நகரமான Balaklyia-ல் இருந்தும் துருப்புகள் வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இதனிடையே, சனிக்கிழமை இரவு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளியிட்ட காணொளியில், உக்ரைன் தற்போது ரஷ்யாவிலிருந்து 2,000 சதுர கிமீ நிலப்பரப்பை விடுவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

புறமுதுகிட்டோடும் ரஷ்யா... முக்கிய நகரங்களை மீட்டெடுத்த உக்ரைன் | Russian Forces Retreat Ukraine Takes Key Towns

@reuters

மேலும், கடந்த 48 மணி நேரத்தில் மட்டுமே அதில் பாதிக்கு மேற்பட்ட பகுதிகளை உக்ரைன் துருப்புகள் மீட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் முக்கிய இராணுவ மையமாக இருந்த Izyum நகரில் இருந்து துருப்புகள் வெளியேறியுள்ளதை அந்த நாடு ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ரஷ்யா தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்திருந்த பகுதிகளில் உக்ரைன் துருப்புகள் 50 கி.மீ வரையில் முன்னேறியதை பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்திருந்தனர்.

புறமுதுகிட்டோடும் ரஷ்யா... முக்கிய நகரங்களை மீட்டெடுத்த உக்ரைன் | Russian Forces Retreat Ukraine Takes Key Towns

@socialmedia

புறமுதுகிட்டோடும் ரஷ்யா... முக்கிய நகரங்களை மீட்டெடுத்த உக்ரைன் | Russian Forces Retreat Ukraine Takes Key Towns

@getty

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.