மெக்சிகோவில் பேருந்தின் மீது எரிபொருள் டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட தீ விபத்தில், 18 பேர் உடல்கருகி உயிரிழந்தனர்.
நேற்று ஹிடால்கோவில் இருந்து மாண்டேரி நோக்கி பயணிகளுடன் சென்ற பேருந்து Tamaulipas பகுதியில் வந்து கொண்டிருந்த போது, எரிபொருள் ஏற்றிச் சென்ற லாரியின் டேங்கர், பேருந்தின் மீது மோதியது.
இதில் லாரியில் எரிபொருள் கசிந்து இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 18 பேர் உயிரிழந்த நிலையில், உயிர் தப்பிய லாரி டிரைவரிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.