செப்டம்பர் 19ம் திகதி ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நடைபெறும்.
பிரித்தானிய வங்கிகளுக்கு பொது விடுமுறை அறிவிப்பு.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில்(Westminster Abbey ) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் ராணியாக 70 ஆண்டுகள் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் உடல்நல குறைவு காரணமாக ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து மகாராணியின் இறப்பிற்கு பல்வேறு உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் பிரித்தானியாவின் புதிய மன்னராக ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகன், மூன்றாம் சார்லஸ் பிரித்தானியா மற்றும் 14 நாடுகளுக்கு மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்-தின்(Queen Elizabeth II) இறுதிச் சடங்குகளுக்கான திகதி உறுதி செய்யப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் ஏற்பாடுகளுக்கு பொறுப்பான நார்போக் டியூக் ஏர்ல் மார்ஷலால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Her Majesty The Queen’s coffin has left Balmoral.
Accompanied by The Princess Royal and Sir Tim Laurence, the cortege will travel to the Palace of Holyroodhouse.
The Wreath on the coffin features Dhalias, Sweet Peas, Phlox, White Heather and Pine Fir from the Balmoral Estate. pic.twitter.com/Atv2v9SGFz
— The Royal Family (@RoyalFamily) September 11, 2022
அதனடிப்படையில் ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில் செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ராணியின் இறுதிச் சடங்குக்கு முன்னதாக மகாராணியின் பூத உடல் செப்டம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பால்மோரல் தோட்டத்தில் இருந்து ஆறு விளையாட்டு வீரர்களால் ஹோலிரூட்ஹவுஸ்( Holyroodhouse ) அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்படும்.
Sky News
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 12 ஆம் திகதி திங்கட்கிழமை ராணியின் பூத உடல் ஹோலிரூட்ஹவுஸிலிருந்து செயின்ட் கில்ஸ் கதீட்ரல் வரை ஒரு ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின் செப்டம்பர் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ராணியின் பூத உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்படும்.
அதற்கு அடுத்த நாள் செப்டம்பர் 14 ஆம் திகதி புதன்கிழமை ராணியாரின் பூத உடல் அடங்கிய சவப்பெட்டி மீது இம்பீரியல் ஸ்டேட் கிரீடம் மற்றும் மலர் மாலை வைக்கப்படும்.
Sky News
இறுதியாக செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மகாராணி இரண்டாம் எலிசபெத்-திற்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கும் புதிய அரசர்: மன்னர் மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
இந்த இறுதிச் சடங்கில் யார் யார் கலந்து கொள்வார்கள் போன்ற தகவல்கள் குறித்த விவரங்கள் அடுத்த வாரம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.