லண்டன்: பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இறுதிச் சடங்குகள் வெஸ்ட்மின்ஸ்டர் அபயில் நடைபெறும் என்றும் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் ராணியின் உடல் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணியின் இறுதி சடங்கு முடிவடைந்தபின், அடுத்த ஒரு வாரத்துக்கு அரச குடும்பத்தினர் மட்டும் துக்கம் அனுசரிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணி எலிசபெத்தின் உடல் தற்போது ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் உள்ளது. இன்று அவரது உடல் எடின்பர்க்கில் உள்ள ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனைக்கு கொண்டுவரப்படும். நாளை மறுநாள் லண்டன் கொண்டுவரப்படுகிறது. இங்கு ராணியின் உடல் சில நாட்கள் இருக்கும். வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் ராணியின் உடலுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரில் அஞ்சலி செலுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிச் சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபவுக்கு எதிரே நடைபெறும்.