பெங்களூர் மக்களைத் தலைகீழாகப் புரட்டிப்போட்ட மழை ஏழை, பணக்காரர்கள் என எந்த வித்தியாசமும் இல்லாமல் வாடிவதைத்து வருகிறது என்று சொல்ல வேண்டும்.
அதிலும் குறிப்பாக மழை நின்ற பின்பும் மக்கள் பல வருடமாகச் சேர்த்து வைத்த பணத்தை மொத்தமாக இழக்க வேண்டிய கட்டாயம் தற்போது உருவாகியுள்ளது.
பெங்களூரில் மழை வெள்ளத்தால் வீடுகளுக்குள் புகுந்த நீர் நினைத்த காட்டிலும் வேக வேகமாகக் குறைந்து வருகிறுத நல் விஷயம் தான், ஆனால் தோடு சில முக்கியப் பிரச்சனைகளும் வரத் துவங்கியுள்ளது. இதனால் மக்கள் தங்களது சேமிப்புகளை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
என்ன நடக்குது தெரியுமா..?
கோடீஸ்வரர்களை திக்குமுக்காட வைத்த பெங்களூர் மழை.. ரூ.30 கோடி வீடு, பென்டலி கார் எல்லாம் போச்சு..!
பெங்களூர்
பெங்களூர் நகரம் முழுவதும் பெய்த கன மழை காரணமாகப் பல இடங்களில் இடுப்பு அளவுக்குத் தண்ணீர் தேங்கியது பல வீடியோ, புகைப்படத்தில் பார்த்தோம். இதில் முதல் பாதிப்பு வாகனங்கள், இரண்டாவது பாதிப்பு மின்சாரம். என்ன புரியவில்லையா..?
கார், பைக்
மழை வெள்ளத்தால் கார், பைக் என எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைத்து வாகனங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதில் சிலவற்றுக்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு அளிக்க முடியும், சிலவற்றுக்குக் கிடைக்காது. இதனால் வாகனங்கள் சரி செய்யவே 5000 முதல் 3-4 லட்சம் வரையில் செலவாகிறதாகப் பெங்களூர் மக்கள் புலம்பி வருகின்றனர்.
எலக்ட்ரிக் லைன்
இதைத் தொடர்ந்து மழை வெள்ளம் மூலம் வீடுகளில் புகுந்த காரணத்தால் எலக்ட்ரிக் லைன் மொத்தமும் பாதிப்படைந்துள்ளது. இதனால் மக்கள் வீட்டுக்குள் செல்லவே பயப்படுகிறார்கள், எதையாவது தொட்டால் ஷாக் அடிக்குமே என்ற பீதியில் உள்ளனர். இதேபோல் பல இடத்தில் கரண்ட் மீட்டர்-ம் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
7- 50 லட்சம் ரூபாய்
இதைச் சரி செய்யவும், புதிய எலக்ட்ரிக் லைன் அல்லது மின்சார உபகரணங்களைச் சரி செய்ய ஒரு தனி வீட்டுக்கு 7 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதேபோல் அப்பார்ட்மென்ட் போன்ற கட்டிடங்களுக்கு லிப்ட், ஜெனரேட்டர் போன்றவை இருக்கும் காரணத்தால் 50 லட்சம் வரையில் செலவாகிறது எனத் தெரிவிக்கின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்பு
டிஜிட்டல் மீட்டர்கள், லிப்ட் கேபிள்கள், எலக்ட்ரிக்கல் பேனல்கள், சர்க்யூட்கள், விளக்குகள், கேபிள்கள் மற்றும் சுவிட்ச் போர்டுகளை மாற்றுவதற்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள் ரூ.10 முதல் 15 லட்சம் வரை செலவிட நேரிடும் என்று மின் துறை நிபுணர்கள் முதற்கட்ட மதிப்பீட்டில் தெரிவிக்கின்றனர். இது டீசல் ஜென்-செட் மற்றும் சோலார் அல்லது யுபிஎஸ் இன்வெர்ட்டர்களைத் சேர்க்கப்படாத தொகை.
பெஸ்காம் மூத்த பொறியாளர்
பெங்களூரு மின்சார விநியோக அமைப்பான பெஸ்காம் மூத்த பொறியாளர் ஒருவர் கூறுகையில், வெள்ள நீரில் மழை நீர் மட்டும் அல்ல கழிவுநீர் போன்ற அசுத்தங்களும் அதிகமாக உள்ளது. இதனால் இந்த வெள்ள நீரில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் சோடியம் போன்ற உப்புகளின் அளவும் அதிகமாக உள்ளன.
எச்சரிக்கை
இத்தகைய நீர், மின் உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களைச் சேதப்படுத்துவதைத் தவிர, அவை மின்சாரத்தையும் கடத்தலாம். இதனால் மக்கள் கட்டாயம் மின்சார லைன்-ஐ முழுமையாகச் செக் செய்தவிட்ட பின்பே வீட்டுக்குள் செல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
3வது பிரச்சனை
தற்போது மழை நீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் பாம்பு, தேல் போன்றவை அதிகமாக இருக்கும் காரணத்தால் மழை நீர் புகுந்துள்ள வீட்டிற்குள் அதிகளவில் இருப்பதாகவும், மக்கள் கார் – பைக், எலக்ட்ரிக் லைன்-களைச் சரி செய்வதற்கு முன்பு பாம்பு பிடிப்பவர்களை அழைத்து வருகின்றனர்.
மக்களே உஷார்.. டிவி, பிரிட்ஜ், ஸ்மார்ட்போன் எதையும் வாங்காதீங்க..!
Bengaluru: electrical shocks fear among flood victims; need to spend 7-15 lakhs before returning home
Bengaluru: electrical shocks fear among flood victims; need to spend 7-15 lakhs before returning home மழை நின்றும் சோகத்தில் பெங்களூர் மக்கள்.. லட்சம் லட்சமாகப் பணம் கரைகிறது..!