திருப்பூர், கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள வந்த எதிர்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது பேசிய
“இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உங்கள் பகுதிக்கு முதன் முறையாக வந்துள்ளேன். எவ்வளவோ தடைகளை தாண்டி அதிமுக தொண்டர்கள் ஆதரவோடு அதிமுக பொதுச்செயலாளராக விவசாயியான நான் பொறுப்பேற்றது. விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி.
அம்மா மறைந்தாலும் அவரிடம் ரூ.1,652 கோடி மதிப்பில் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நானே வந்து அடிக்கல் நாட்டினேன். விடியா
அரசின் நிர்வாக குளறுபடி காரணமாக இத்திட்டத்தை முழுமை செய்யாமல் கிடப்பில் உள்ளது. அதனால் பவானியில் ஏராளமான குடிநீர் வீணாகியது.
அடுத்த ஆண்டு டிசம்பர் வந்தாலும் இத்திட்டத்தை நிறைவேற்ற மாட்டார்கள். ஒரு லோடு சவுடு மண் எடுக்க 1000 ரூபாய் லஞ்சம் வாங்குகிறார்கள். மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆன பிறகு எதையெதையோ எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. 525 அறிவிப்புகள் கொடுத்தார். கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி விட்டார்கள்.
திறமையற்ற முதலமைச்சர் முதியவர்களுக்கு கொடுக்கும் உதவி தொகையை நிறுத்தி விட்டனர். இந்தியாவில் 25 மாநிலங்களில் மத்திய அரசு டீசல் விலையை குறைத்தது. ஆனால் தமிழக அரசு விலையை குறைக்க வில்லை. அதிமுக கொண்டுவந்த திட்டங்களை தான் திறந்து வைக்கிறார்கள்.
துரதிஷ்டவசமாக உங்கள் ஆட்சி வந்து விட்டது. ரிப்பன் வெட்ட வேண்டியது தானே அதைக்கூட வேகமாக செய்ய மறுக்கிறார்கள்.
விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கினோம் இன்று எப்போது மின்சாரம் வரூம் என்று தெரியவில்லை. மின்கட்டணத்தை உயர்த்தி 15 ஆயிரம் கோடி லாபம் அடைகிறார்கள். ஆனால் பற்றாக்குறை 12,500 கோடி தான். இனி வருடம் தோறும் 6 சதவீதம் உயர்த்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
கொரோனா விறகு பிறகு மக்கள் வாழ்வதற்கே சிரமப்படும் சூழலில் மின்கட்டணத்தை உயர்த்தினால் பொதுமக்கள் எப்படி தாக்கு பிடிக்க முடியும். சொத்து வரி 100 முதல் 150 சதவீதம் உயர்த்தி உள்ளனர். வருமானம் இல்லாத சூழலில் மக்களை கருத்தில் கொள்ளாமல் வீட்டு மக்களை தான் நினைக்கிறார். திமுக ஆட்சியில் எதிலும் கலெக்சன், கமிஷன், கரெப்ஷன்” இவ்வாறு கூறினார்.