வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று (11) காலை உருவானதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

மேற்கு மத்திய -வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கரையோரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (11) காலை வலுவடைந்தது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கோபால்பூர் அருகே 20 கி.மீ. தூரத்தில் நீடிப்பதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.  இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு சத்தீஸ்கரை நோக்கி நகர்ந்து வலுவிழக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கூடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, ஆகிய துறையூகங்களில் 1-வது புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.