விக்ரம்
படம்
100
நாட்களை
கடந்துள்ளது.
மிகப்பெரிய
வெற்றியைப்
பெற்றுள்ளது.
இதன்
மூலம்
தமிழ்
திரையுலகில்
புதிய
நடைமுறை
வந்துள்ளது.
விக்ரம்
படம்
வெற்றியின்
மூலம்
இனி
தனி
ஹீரோ
மிகப்பெரிய
நடிகராக
சாதிக்கும்
நடைமுறை
திரையுலகில்
முடிவுக்கு
வருகிறதா?
கமல்ஹாசன்
எனும்
ஆளுமையே
மிகப்பெரிய
ஹிட்
கொடுக்க
உடன்
3
ஹீரோக்களை
நடிக்க
வைத்ததன்
மூலம்
தமிழ்
திரையுலகில்
மல்டி
ஸ்டார்
பாணியால்
தனி
ஹீரோ
ஆதிக்கம்
ஒழிகிறதா?
தனி
ராஜ்ஜியம்-
மல்டி
ஸ்டார்
ராஜ்ஜியம்
நடத்திய
தமிழ்
ஹீரோக்கள்
ஒரு
காலத்தில்
தியாகராஜ
பாகவதர்,
பியூ
சின்னப்பா,
எம்ஜிஆர்,
சிவாஜி,
ரஜினி,
கமல்
என
திரையுலகில்
தனி
ராஜ்ஜிய
ஹீரோக்கள்
கோலோச்சியது
நடந்தது.
ரஜினி
கமலுக்கு
பின்னரும்
அஜித்,
விஜய்,
சூர்யா,
தனுஷ்
என
அது
தொடர்கிறது.
ஆனாலும்
பான்
இந்தியா,
மல்டி
ஸ்டார்
ஃபிலிம்,
மல்டிவெர்ஸ்
என்கிற
பெயரில்
பல
ஹீரோக்கள்
ஒன்றாக
சேர்ந்து
நடிப்பது
புது
பாணி
இது
தமிழில்
ஆரம்ப
காலங்களில்
எம்ஜிஆர்
சிவாஜி
கூண்டுக்கிளி,
ரஜினி
கமல்
சில
படங்கள்,
அஜித்
விஜய்
சில
படங்கள்
என
முயன்று
பின்னர்
பிரபலமடைந்ததும்
விட்டுவிட்டனர்.
ஹாலிவுட்டில்
சமீப
காலமாக
அவெஞ்சர்ஸ்,
எக்ஸ்பாண்டபிள்
போன்ற
படங்களில்
உருவாகி
வருகிறது.
தனுஷ்
நடித்த
கிரே
மேன்
அந்த
வகை.

இந்தியா
முழுவதும்
மல்டிஸ்டார்
ஃபார்முலா
சமீப
காலமாக
ப்ரோ
டாடி,
புஷ்பா,
ஆர்.ஆர்.ஆர்,
விக்ரம்,
சிம்பா,
83,
அத்ரங்கி
தே,
2.0,
பத்மாவத்,
விக்ரம்
வேதா
என
பல
படங்கள்
வருகின்றன.
இதில்
தெலுங்கு
மற்றும்
இந்திப்படங்களில்
அதிக
அளவில்
ஹீரோக்கள்
இணைந்து
நடிப்பது
அதிகரித்துள்ளது.
தமிழில்
இதற்கு
சமீப
காலத்தில்
பிள்ளையார்
சுழி
போட்டவர்
விஜய்
சேதுபதி
எனலாம்.
விக்ரம்
வேதா,
ரஜினியின்
பேட்ட,
விஜய்யுடன்
மாஸ்டர்
சமீபத்தில்
விக்ரமில்
வில்லன்
ரோல்
அடுத்து
புஷ்பா
2
உள்ளிட்ட
படங்களிலும்
நடிக்கிறார்.

உலக
நாயகனின்
பாணியா
விக்ரம்-லோகேஷ்
ஆதிக்கம்
செலுத்தினாரா?
கமல்ஹாசன்
மிகப்பெரிய
ஸ்டார்.
அவர்
படங்களில்
இன்னொரு
ஸ்டாரை
இணைத்து
நடிப்பது
முதல்
முறையல்ல
ஏற்கெனவே
அர்ஜுனுடன்
குருதிப்புனல்,
பிரபுவுடன்
வெற்றிவிழா,
சிவாஜியுடன்
தேவர்
மகன்
என
பல
படங்கள்
நடித்துள்ளார்.
ஆனால்
சமீபத்தில்
கமல்ஹாசன்
ஹீரோ
இமேஜை
விட்டு
இறங்கி
வந்து
மூன்று
ஹீரோக்கள்
மற்றும்
கொசுறு
ஹீரோ
நரேனுடன்
சேர்த்து
4
பேருடன்
நடித்துள்ளார்.
இதனால்
படம்
சூப்பர்
டூப்பர்
ஹிட்
அடித்தது.
கமலின்
வழக்கமான
பாணியாக
இல்லாமல்
இது
லோகேஷ்
கனகராஜ்
படம்
என்கிற
அளவில்
வெளிவந்துள்ளது.

தமிழ்
சினிமாவில்
மல்டி
ஸ்டார்
ஃபார்முலா
இதன்
மூலம்
கமல்
வெற்றிக்காக
சில
அட்ஜெஸ்ட்மெண்டுகளை
செய்துள்ளார்
என
சினிமா
வட்டாரத்தில்
பேச்சு
இருந்தாலும்
விக்ரமின்
வீரியமான
வெற்றி
அனைத்தையும்
அடக்கி
கமல்
படம்
என்பதுபோல்
ஆக்கிவிட்டது.ஆனாலும்
இனி
ஒருபடம்
இதுபோல்
வெற்றி
படமாக
வரவேண்டும்
என்றால்
இதுபோன்ற
மல்டிவெர்ஸ்
படங்களால்
மட்டுமே
முடியுமா?
என்கிற
கேள்விக்கு
கமலின்
அடுத்த
படமான
இந்தியன்
2,
பா.ரஞ்சித்துடன்
இணையும்
படம்
வருகையும்
அதற்கு
கிடைக்கும்
வெற்றிக்கு
பின்னரே
முடிவெடுக்க
முடியும்.
அதே
நேரம்
ரஜினி,
விஜய்,
அஜித்
தனி
ஹீரோ
ராஜ்ஜியத்தில்
100
கோடி,
200
கோடி,
300
கோடி
என
பாக்ஸ்
ஆஃபிஸ்
ஹிட்
கொடுக்கிறார்கள்.
ஆகவே
தமிழ்
சினிமாவை
பொறுத்தவரை
மல்டி
ஸ்டார்
ஃபார்முலா
எப்போதாவதுதான்
வர்க்
ஆகும்
எப்போதும்
வர்க்
ஆகாது
என்பதே
நிதர்சனம்.