விமானத்தில் பறக்கும் போது உயிரிழந்த பெண்.
துபாயில் இருந்து கேரளா திரும்பி கொண்டிருந்த போது நேர்ந்த சோகம்.
வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பெண்ணொருவர் நடுவானில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மினி எல்சா ஆண்டனி (52) என்ற பெண் நேற்று துபாயில் இருந்து கேரளாவின் கொச்சிக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது விமானத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார்.
இதன்பின்னர் விமானம் கொச்சிக்கு வந்தடைந்த நிலையில் மருத்துவமனைக்கு மினி கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மினி இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.
onmanorama
விமானத்தில் மினி பயணிக்கும் போது அவர் கணவரும் உடனிருந்தார்.
அவரின் இறுதி சடங்கு தேதி பின்னர் முடிவு செய்யப்படும்.
சில காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மினி அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார் என தெரிகிறது.
இது இயற்கையான மரணம் என்பதால் காவல்துறையினர் வழக்குப்பதிவு எதுவும் செய்யவில்லை.