மாருதி சுசூகி இந்தியா லிமிடெட், ஜப்பான் நாட்டின் சுசூகி மோட்டார் கார்ப்பரேஷனுடன் இணைந்து 40 ஆண்டுக்கால கூட்டணியை நிறைவு செய்தது.
இந்த நிகழ்வையொட்டி மாருதி சுசூகி ’40 ஆண்டுகள் – ஜாய் ஆஃப் மொபிலிட்டி’ என்ற வருடாந்திர ஒருங்கிணைந்த அறிக்கை என்ற சிறப்பு அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
இந்த அறிக்கை நிறுவனத்தின் 40 ஆண்டுக்கால பயணத்தைப் பிரதிபலித்ததோடு, நம்பிக்கையுடனும் முன்னோக்கிச் செல்லும்போது அதன் எதிர்கால வளர்ச்சிப் பாதையின் ஒரு திட்டத்தை அளிக்கிறது.
இந்தியாவில் பணத்தை கொட்டும் ஜப்பான் சுசூகி.. புதிய அறிவிப்பு..!

மாருதி உத்யோக் மற்றும் சுசூகி
மாருதி உத்யோக் மற்றும் சுசூகி இடையேயான கூட்டணி பிப்ரவரி 24, 1981 இல் தொடங்கியது. இக்கூட்டணியில் உருவான மாருதி சுசூகி நிறுவனம் 1983 இல் மாருதி 800 உடன் தனது உற்பத்தியைத் தொடங்கியது. நான்கு தசாப்தங்களாக ஆட்டோமொபைல் சந்தையில் இக் கார் மூலம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

மாருதி 800 கார்
மாருதி 800 காரை இந்தியாவில் வெறும் 13 மாதங்களில் ஒரு இந்திய வாகன உற்பத்தி நிறுவனம் வடிவமைப்பிலிருந்து உற்பத்திக்குக் கொண்டு வந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.1983க்கு பின்பு பல நிறுவனங்கள் இதைச் செய்திருந்தாலும் முதல் சாதனை படைத்தது மாருதி சுசூகி தான்.

மலிவு விலை கார்
மாருதி சுசூகி நிறுவனம் அதன் ஆரம்ப நாட்களில், ‘மலிவு விலையில் கார் தயாரிப்பாளராக’ அறியப்பட்டது. பின்னர், இம்நிறுவனத்தின் கார் தயாரிப்பு சொகுசு பிரிவை நோக்கி மாறியது இதற்கு முக்கியக் காரணம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தான். மாருதி சுசூகி ஆடம்பர பிரிவுக்காகக் கிசாஷி மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களை அறிமுகப்படுத்தியது.

ரிட்டன் வேல்யூ
மாருதி சுசூகி கார்கள் என்றாலே பட்ஜெட் கார்கள் எனப் பெயர் பெற்றுள்ளது மட்டும் அள்லாமல் இந்தக் கார்களின் மற்றொரு USP ஆக இருப்பது கார்கள் வாங்கிய நாளிலிருந்து 3-4 ஆண்டுகளுக்குப் பிறகும் 40-50 சதவிகித வருமானத்தை எளிதாக வழங்குகின்றன. இதேபோல் இந்தக் கார்களின் சர்வீஸ் கட்டணங்களும் மிகவும் குறைவு என்பதால் ரிட்டன் வேல்யூ-வும் அதிகம்.

முதல் மின்சார வாகனம் 2025 இல் வருகிறது
மாருதி சுஸுகி இந்தியா தனது முதல் மின்சார வாகனத்தை (EV) 2025 ஆம் ஆண்டிற்குள் கொண்டு வரும் என்று மாருதி சுஸுகி இந்தியாவின் MD & CEO ஹிசாஷி டேகுச்சி சமீபத்தில் தெரிவித்தார். நிறுவனம் இந்தியாவில் 50 மின்சார வேகன் ஆர் யூனிட்களைச் சோதனை செய்து வருகிறது.

புதிய தொழிற்சாலைகள்
மாருதி சுசூகி இந்தியாவில் 2025 முதல் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதற்காகப் புதிதாக ஒரு கார் உற்பத்தி தொழிற்சாலையை ஹரியானா-வில் நிறுவ உள்ளது.
இதேபோல் எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி தொழிற்சாலையைச் சுசூகி தனியாகச் சொந்த முதலீட்டில் குஜராத் மாநிலத்தின் ஹன்சல்பூர்-ல் அமைக்க உள்ளது. இது 2026 முதல் செயல்படத் துவங்கும்.
Maruti Suzuki JV completed 40 Years journey
Maruti Suzuki JV completed 40 Years journey 40 ஆண்டுகள் நிறைவு செய்த மாருதி சுசூகி கூட்டணி..!