சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்திருந்தாலும், இந்தியாவில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றாமல் அதிகப்படியான பழைய விலைக்கே விற்பனை செய்கிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்த்த போது விலையை மாற்றாமல் வைத்திருந்த காரணத்தால், 5 மாதம் ஏற்பட்ட இழப்பை மத்திய அரசு தற்போது ஈடு செய்து வருவதாகத் தெரிகிறது.
காஃபி ஷாப்பில் ஆஃபீஸ்.. பெங்களூர் இளைஞர்கள் மழையால் திண்டாட்டம்..!
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை
பிப்ரவரி மாதத்திற்குப் பின்பு சர்வதேச பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் தான் ஒரு பேரல் 90 டாலர் விலையில் குறைந்தது. ரஷ்யா – உக்ரைன் போருக்கு பின்பு கச்சா எண்ணெய் விநியோகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விலை அதிகரித்தது.இந்நிலையில் 7 மாதத்திற்குப் பின்பு தற்போது 90 டாலருக்குக் கீழ் குறைந்துள்ளது.
ரஷ்யா, OPEC
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ரஷ்யா தனது எரிவாயு பைப்லைன்-ஐ முடக்கியுள்ள வேளையிலும், OPEC மற்றும் OPEC+ அமைப்புகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கத் திட்டமிட்டு இருக்கும் வேளையில் சர்வதேச பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலை
கச்சா எண்ணெய் விலை எவ்வளவு மாறினாலும் இந்தியாவில் ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலை சுமார் 158 நாட்களாகத் தொடர்ந்து ஓரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசல் விலை
இந்நிலையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்த்த போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே இருந்தது என எண்ணெய் வள துறை அமைச்சர் ஹதீப் சிங் பூரி தெரிவித்தார். மேலும் கச்சா எண்ணெய் விலை 88 டாலருக்குக் கீழ் வந்தால் மட்டுமே எரிபொருள் விலையில் சில தளர்வுகள் எதிர்பார்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம்
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரீடைல் எரிபொருள் விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) ஆகியவை நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த 5 மாதங்களாக விலையை உயர்த்தாமல் உள்ளது.
Crude Oil at 7 month low; but petrol, diesel prices unchanged why..
Crude Oil at 7 month low; but petrol, diesel prices unchanged why.. 7 மாத சரிவில் கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல், டீசல் குறைக்காமல் இருக்கும் மத்திய அரசு..!