விஜய் டிவியில் வாரந்தோறும் நீயா நானா நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சமூக பிரச்சனைகள் குறித்தும், உறவுச் சிக்கல்கள் மற்றும் அதன் பின்னணியை அலசி ஆராய்வதோடு மட்டுமல்லாமல், நிபுணர்களை வரவழைத்து அவர்களின் பார்வையையும் தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறது. இந்த வாரம் கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள்; குடும்பம் எப்படி சமாளிக்கிறது? என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில் உரையாடிய கணவன் மனைவி இருவரில், மனைவி கணவனின் படிப்பறிவில்லாமையை கேலியாக பேசினார். குழந்தையின் பிராகரஸ் ரிப்போர்டை ஒரு மணி நேரம் எழுத்துக்கூட்டி படித்துக் கொண்டிருப்பார் என்றெல்லாம் கூறினார். இதனைக் கேட்ட தொகுப்பாளர் கோபிநாத், படிப்பறிவில்லாத அவர், படிப்பறிவு இருக்கும் உங்களை திருமணம் செய்திருக்கிறார்.
அவருக்கு தெரியாது என்பது பெரிய தவறில்லை. எல்லோரும் எல்லாவற்றையும் தெரிந்துவைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என கோபிநாத் பதில் கூறியபோதும், மனைவி அதனை ஏற்காமல் கேலியாக பேசிக் கொண்டிருந்தார். அதேநேரத்தில் அந்த கணவனிடம் பிள்ளையின் பிராகர்ஸ் ரிப்போர்டை ஏன் அவ்வளவு நேரம் பார்க்கிறீர்கள் என கேட்கிறார். தான் படிக்கவில்லை என்பதால் மகள் எடுத்திருக்கும் மார்க்கை பார்ப்பேன். என் மகளை ஒரு நல்ல மருத்துவராக பார்க்க வேண்டும் என விரும்புகிறேன் என நெகிழ்ச்சியாக கூறினார்.
ஒருத்தர இகழ்ந்து அதை நகைச்சுவைன்னு நினைச்சு சிரிக்கறது ஒரு விதமான மனநோய். உங்க பார்வையும் பேச்சும் திருப்தியா இருந்துச்சு கோபி அண்ணாவெற்றிக்கு இங்க ஆயிரம் இலக்கணம் வச்சிருக்காங்க. ஆனா ஒரு அப்பா என்னைக்குமே தோற்கமுடியாது! அவரது வெற்றிய அங்கீகரிச்சதுக்கு வாழ்த்துகள்! @Gobinath_C pic.twitter.com/RUaSsQuViN
— Priya BhavaniShankar (@priya_Bshankar) September 11, 2022
இந்த பதிலைக் கேட்ட தொகுப்பாளர் கோபிநாத், மனைவியிடம் மீண்டும் கேட்கும்போது அவர் இன்னும் பழமையிலேயே இருக்கிறார். இப்போதைய காலத்திற்கு அவர் இன்னும் வரவில்லை எனக் கூறினார். இந்த பதிலை கோபிநாத் கேட்டதும், அவருக்கு கோபம் வந்துவிட்டது. உடனே, இந்த இடத்திலேயே நான் கூறுகிறேன், அவர் ஒரு சிறந்த அப்பா என அறிவித்து நிகழ்ச்சியின் பாதியிலேயே பரிசு கொடுத்தும் கவுரவித்தார். மேலும் மகளிடம் கேட்கும்போது, என் தந்தை எப்போதும் வெற்றி பெற்றவர் தான், அவர் எனக்காக தான் எல்லாமே செய்கிறார் என கூற அரங்கமே அதிர்ந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகியுள்ளது. நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் இந்த வீடியோவை டேக் செய்து தொகுப்பாளர் கோபிநாத்துக்கு மனதார வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.