மதுரை: மதுரை எஸ்.பி. நத்தம் கிராமத்தில் தகுதி இல்லாதோருக்கு இலவச பட்டா வழங்கியவர்கள் யார்? என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தகுதி இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கிய அதிகாரிகளின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு பல திட்டங்களை அறிவித்தாலும் அதிகாரிகள் முறையான நபர்களுக்கு அதை வழங்குவது இல்லை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
