வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ‘டுவென்டி 20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
‘டுவென்டி 20’ கிரிக்கெட் போட்டிகளின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் ‘டி-20 உலககோப்பை’ போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ம் தேதி துவங்குகிறது. நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ள உலககோப்பை தொடரில் பல்வேறு நாடுகளும் தங்களது அணி வீரர்களை அறிவித்து வருகின்றன. இந்தியா சார்பில் உலக கோப்பையில் விளையாட உள்ள வீரர்களை இன்று (செப்.,12) இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
அதன்படி, ரோகித் ஷர்மா தலைமையில் ‘டி20 உலக கோப்பை’ தொடரில் விளையாட உள்ள இந்திய அணி: ரோகித் ஷர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்த்திக் பாண்ட்யா, அஸ்வின், சகால், அக்சர் படேல், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
காத்திருப்பு வீரர்கள்: முகமது ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னாய், தீபக் சாகர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement