வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நொய்டா: இந்தியாவின் பால்வளத்துறையின் உண்மையான தலைவர்கள் பெண்கள் தான் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவில் சர்வதேச பால்வள கூட்டமைப்பின் ‘உலக பால்வள உச்சிமாநாடு 2022’ இன்று (செப்.,12) துவங்கியது. இந்திய எக்ஸ்போ மையத்தால் நடத்தப்படும் உச்சிமாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது மோடி பேசியதாவது: இந்தியாவில் 48 ஆண்டுகளுக்கு பிறகு உலக பால்வள உச்சிமாநாடு நடைபெறுகிறது. 2014ல் இந்தியாவில் 146 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தி, தற்போது 220 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. அதாவது 2014ஐ ஒப்பிடுகையில் 8 ஆண்டுகளில் 44 சதவீதம் அதிகரித்துள்ளது.
நாட்டில் சுமார் 8 கோடி குடும்பங்கள் பால் உற்பத்தித் துறை மூலமாக வேலைவாய்ப்பை பெற்றுள்ளன. சிறிய அளவிலான பால் பண்ணையாளர்களின் கூட்டு முயற்சியால் இந்தியா உலகின் மிகப்பெரிய பால் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடாக மாறியுள்ளது. இந்தியாவின் பால்வளத் துறையின் உண்மையான தலைவர்கள் பெண்கள்தான். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement