இலங்கையில் அரிசி வாங்குவதற்கு பணம் இல்லை அரசு மீது எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

கொழும்பு,

இலங்கையில் அரிசி பற்றாக்குறை உள்ளது. அதேநேரம் அரிசி இறக்குமதி செய்ய பணம் இல்லை என வேளாண் மந்திரி மகிந்த அமரவீரா சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

இதைப்போல பணம் இல்லாததால் உள்நாட்டு விவசாயிகளிடம் இருந்தும் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் இல்லாமல் விவசாயிகள் திருப்பி அனுப்பப்படும் செய்திகளை தனியார் ெதாலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன.

இந்த விவகாரத்தில் அரசை பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. இந்த கட்சி எம்.பி. ரோகிணி கவிரத்ேன கூறுகையில், ‘இலவச அரிசிக்காக வெளிநாடுகளிடம் அரசு கெஞ்சிக்கொண்டு இருந்தது. அதேநேரம் உள்ளூரில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படவில்லை’ என குற்றம் சாட்டினார்.

அரிசி வாங்குவதற்கு பணமில்லை என்பதற்காக அரசு வெட்கப்பட வேண்டும் எனக்கூறிய அவர், ஆனால் 37 புதிய மந்திரிகளை நியமிக்க அரசிடம் போதுமான பணம் இருப்பதாக தெரிகிறது என்றும் சாடினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.