2022 ஆசிய கிரிக்கெட் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்ட இலங்கை அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நல்வாழ்த்துக்;களைத் தெரிவித்துள்ளார்.
ஆசிய கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சாதனை மிக்க வெற்றியைப் பெற்று எமது கிரிக்கெட் அணி மீண்டுமொரு தடவை இலங்கையின் புகழை சர்வதேசத்தில் மேலும் உயர்த்தியுள்ளது.
இந்த அனைத்து வெற்றிகளுக்கும் தலைமைத்துவம், அணியின் சகல வீரர்களின் ஒற்றுமை மற்றும் வரையறையற்ற அர்;ப்பணிப்பு என்பன பெரும் பங்காற்றியுள்ளன. அதற்காக அர்ப்பணித்த பயிற்சியாளர்கள், முகாமையாளர்கள் மற்றும் நிருவாகிகளுக்கு ஜனாதிபதி நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள இன்றைய சவால் மிக்க சூழ் நிலைக்கு மத்தியிலும் தாய்நாட்டிற்காக ஒன்றிணைந்து பெற்றுள்ள இந்த வெற்றி, அனைவரும் செய்த அர்ப்பணிப்பானது, கிரிக்கெட் உலகுக்கு மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் இரண்டாவது தலைமுறையினருக்கு சிறந்த முன்னுதாரணமாகும். அத்துடன் இந்த விசேட வெற்றிக்காக அர்ப்பணித்த சகலருக்கும் ஜனாதிபதி தனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு