உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வால் ஆகஸ்ட் மாதம் சில்லறை பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வந்துள்ளது என மத்திய புள்ளியியல் துறை திங்கட்கிழமை வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன.
பணவீக்கம் உயர்வு மத்திய வங்கிக்கு பெரும் தலைவலியாகத் தான் இருக்கும். அதை சரி செய்ய முன்பு எல்லாம் வட்டி விகிதம் குறைக்கப்படும்.
ஆனால் இப்போது பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கடந்த 2 நாணய கொள்கை அமர்வில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
சில்லறை பணவீக்கம் உயர்வு
ஜூலை மாதம் சில்லறை பணவீக்கம் 6.71 சதவீதம் இருந்தது. ஆகஸ்ட் மாதம் 6.90 சதவீதமாக இருக்கும் என ப்ளும்பெர்க் கணித்து இருந்தது. ஆனால் மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட கணக்கின் படி ஆகஸ்ட் மாதம் சில்லறை பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம்
பருவ மழை காரணமாகக் காய்கறி விலைகள் உயர்ந்துள்ளன. வேளாண் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உணவுப் பொருட்கள் விலை கட்டுப்படுத்த முடியாமல் 7.62 சதவீதமாக அதிகரித்துள்ளது.

எரிபொருள் & ஆடைகள்
எரிபொருட்கள் மற்றும் மின்சாரம் மீதான பணவீக்கம் 10.78 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆடைகள் மற்றும் காலணிகள் மீதான பணவீக்கம் 9.91 சதவீதமாக அதிகரித்துள்ளது. வீடு விலையும் 4.06 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2 நாணய கொள்கை கூட்ட அமர்வில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து தற்போது 5.40 சதவீதமாக உள்ளது. இப்போது ஏற்பட்டு வரும் செலவைக் குறைக்க அடுத்து நடைபெற உள்ள நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தைக் குறைக்குமா என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தொழில்துறை உற்பத்தி
இதற்கிடையில், தொழில்துறை உற்பத்தி ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட ஜூலை மாதத்தில் 2.4% அதிகரித்துள்ளது என்று புள்ளியியல் அமைச்சகம் தனித்தனியாக வெளியிட்ட தரவு வெளியிடப்பட்டுள்ளது.
August Retail Inflation Increases To 7% On High Food Prices
உணவுப் பொருட்கள் விலை உயர்வு எதிரொலி.. ஆகஸ்ட் மாதம் பணவீக்கம் 7% அதிகரிப்பு! | August Retail Inflation Increases To 7% On High Food Prices