இந்தியாவில் தினமும் சைபர் க்ரைம் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு மட்டும் 4047 ஆன்லைன் வங்கி மோசடிகள், 2160 ஏடிஎம் மோசடிகள், 1194 டெபிட் / கிரெடிட் கார்டு மோசடிகள், 1093 ஓடிபி மோசடிகள் நடைபெற்றுள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன.
இப்போது புதிதாக ஒரு மோசடி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதிலும் நூற்றுக் கணக்கானவர்கள் ஒரு மின் கட்டணம் செலுத்த வேண்டி வந்த எஸ்எம்எஸ்-ஐ நம்பி தங்களது பணத்தை இழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Cyber Attack: வெறும் 3 மாதத்தில் 18 மில்லியன் சைபர் தாக்குதல்கள்..!
மின்சார கட்டணம் மோசடி
மின்சார கட்டணம் மோசடி கடந்த சில மாதங்களாகவே அரங்கேறி வருகிறது. எஸ்மார்ட் போனில் வங்கி கணக்கு சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மொத்த பணத்தையும் இழந்துள்ளார்கள் என ஜார்கண்ட் மாநில சைபர் கிரைம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடரும்
இப்போது இந்த மோசடியை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தாலும், தொடர்ந்து இது போன்ற மோசடி நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே வாட்ஸ்ஆப் அல்லது எஸ்எம்எஸ் மூலம் இது போன்ற ஏதாவது தகவல்கள் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்எம்எஸ்
ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா பகுதியில் நடைபெற்ற மின்சார கட்டணம் மோசடியில், மொபைல் போன்களுக்கு உங்கள் மின்சார கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் உள்ளது. உடனே அதனை செலுத்துங்கள். இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு இந்த எண்ணைத் தொடர்புகொள்ளுங்கள் என அனுப்பப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு காலி
அந்த எஸ்எம்எஸ் ஒரு மோசடி என தெரியாமல் கிளிக் செய்த பலர் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை வழங்கி மொத்த பணத்தையும் இழந்துள்ளார்கள். சிலர் சேவை எண் என்பதை தொடர்பு கொண்டும் பணத்தை இழந்துள்ளார்கள். வங்கி கணக்கு விவரங்களை மின்சார வாரியம் கேட்கிறது என வாடிக்கையாளர் சேவை மையத்தில் பேச வைத்து பணம் மோசடி நடைபெற்றுள்ளது.
டெல்லி
டெல்லியில் மட்டும் 1000+ வழக்குகள் மின்சார கட்டணம் செலுத்த சொல்லி மோசடி நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 65 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஜார்கண்ட், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது.
Electricity Bill Scam Alert: A Click Will Make Your Bank Account Empty
Electricity Bill Scam Alert: A Click Will Make Your Bank Account Empty