பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1,200க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள் வருகிற 17ஆம் தேதி முதல் ஏலம் விடப்பட இருக்கின்றன.
பிரதமர் மோடி செல்லும் பயணங்கள் மற்றும் கலந்துகொள்ளும் விழாக்களில் அவருக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அவற்றை அவர் அவ்வப்போது ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு வழங்கி வருகிறார். அதன்படி பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1,200க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள் www.pmmementos.gov.in என்ற இணைய தளத்தில் வருகிற 17ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை ஏலம் விடப்பட உள்ளன.
பொதுமக்கள் தொடங்கி விஐபிக்கள் வரை பிரதமருக்கு வழங்கிய பரிசுப் பொருட்களுக்கு, குறைந்தபட்சமாக 100 ரூபாயும் அதிபட்சமாக 10 லட்ச ரூபாயும் அடிப்படை ஏல விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய அருங்காட்சியக பொது இயக்குநர் அத்வைதா தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
