ஒருவர் பலி, 20 பேர் காயம்| Dinamalar

மூணாறு: கேரள மாநிலம் மூணாறு டிப்போவில் இருந்து இன்று (செப்.,12) காலை 5 மணிக்கு எர்ணாகுளத்திற்கு புறப்பட்டு சென்ற கேரள அரசு பஸ் கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி வாளரா அருகே சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பஸ்சில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். உயிரிழந்தவர் வாளரா அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் குளமாங்குழியை சேர்ந்த சஜீவ்ஜோஸ் (வயது 45) என்பது தெரியவந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.