கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மலைப்பாம்பை பிடிக்க முயன்ற 60 வயது பாம்பு பிடி வீரர், அதனிடமே சிக்கி உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவேரிப்பட்டினம் அருகே உள்ள பன்னிஹள்ளி கிராமத்தில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. சின்னசாமி என்ற விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் இருந்து ஆட்டை விழுங்கிய 10 அடி நீள மலைப்பாம்பு, பின்னர் அங்குள்ள விவசாய கிணற்றின் அருகே 3 நாட்களாக முகாமிட்டிருந்தது. இதையடுத்து பனகமுட்லு கிராமத்தை சேர்ந்த பாம்பு பிடிக்கும் தொழிலாளியான நடராஜை வரவழைத்து பாம்பை பிடிக்க சின்னசாமி முயன்றுள்ளார்.
அப்போது திடீரென நடராஜனின் கால், உடல் பகுதியை சுற்றிக்கொண்ட மலைப்பாம்பு, அருகில் இருந்த 30 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதில் மூச்சுத்திணறி நடராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். தீயணைப்புத்துறையினர் நடராஜ் உடலை கயிறு கட்டு மீட்டனர். மலைப்பாம்பு கிணற்றுக்குள் பதுங்கி கொண்டதால் நடராஜனின் உடலை மீட்க முடிந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.