புனே: சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதர் பூனாவாலா பெயரைக் கூறி, அந்நிறுவனத்திடம் மர்ம நபர் ரூ.1 கோடி மோசடி செய்துள்ளார்.
இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரிக்கிறது. புனேயைத் தலைமையிடமாகக் கொண்ட இந் நிறுவனத்தின் சிஇஓ-வாக ஆதர் பூனாவாலா உள்ளார். கடந்த 7-ம் தேதி இந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சதீஷ் தேஷ்பாண்டேவுக்கு வாட்ஸ்அப்பில் பூனாவாலாவின் எண்ணிலிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.
அதில் சில வங்கிக் கணக்குகள் குறிப்பிடப்பட்டு அவற்றுக்குரூ.1 கோடி அளவில் பணம் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந் தது. இதையடுத்து அந்த வங்கிக் கணக்குகளுக்கு சீரம் நிறுவனத்தின் கணக்கிலிருந்து சதீஷ் தேஷ்பாண்டே ரூ.1,01,01,554 அனுப்பியுள்ளார்.
பணத்தை அனுப்பிய பிறகுஇயக்குநர் சதீஷ் தேஷ்பாண்டேஅது குறித்த தகவலை நிறுவனத்திடம் பகிர்ந்தபோதுதான், பூனாவாலா அப்படி எந்த ஒரு குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை என்பதும் பூனாவாலா எண்ணை பயன்படுத்தி வேறு ஒருவர் மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.
போலீஸ் வழக்கு பதிவு: இதையடுத்து சீரம் நிறுவனம் சார்பில் புனே பந்த்கார்டன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப் படையில் மோசடி குறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.