சீன நிறுவங்களின் போலி விளையாட்டு.. அடுத்தடுத்து இந்தியாவில் மோசடிகள் அம்பலம்..!

டெல்லி: சீனாவைச் சேர்ந்த பல போலி நிறுவனங்களை இந்தியாவில் பதிவு செய்து, அதன் மூலம் மோசடிகளில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

டெல்லி. கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், சீனாவின் போலி நிறுவனங்கள் செயல்படுவதாக கம்பெனிகள் பதிவாளர் அலுவலகம் புகார் தெரிவித்தது.

இது தொடர்பாக, மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத்துறையின் கீழ் செயல்படும் விசாரணை அலுவலகம் சில தினங்களுக்கு முன்பு விசாரணையை (SFIO) துவக்கியது.

இந்தியாவில் 2 வருடம் இல்லாத அளவிற்கு அந்நிய செலாவணி இருப்பு சரிவு.. என்ன காரணம்?

அதரடி சோதனை

அதரடி சோதனை

ஹரியானாவின் குர்கானில் உள்ள ஜில்லியான் கன்சல்டன்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், பெங்களூரில் உள்ள பினைன்டி பிரைவேட் லிமிடெட், தெலுங்கானாவின் ஹைத்ராபாத்தில் உள்ள ஹூசிஸ் கன்சல்டிங் லிமிடெட் உட்பட, 32 சீன நிறுவனங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகரிகார்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

யார் யார் இயக்குனர்கள்?

யார் யார் இயக்குனர்கள்?

இந்த சோதனையின் மத்தியில் மோசடியாக உருவாக்கப்பட்டுள்ள நிறுவனங்கள், பலவும் போலியானவை என்பதும் தெரியவந்தது. மிக சாதாரண வேலைகளில் உள்ள சாமானியர்களை, இந்த நிறுவனங்களின் இயக்குனர்களாக நியமித்துள்ளதும் அம்பலமாகியுள்ளது. சீன போலி நிறுவனத்தின் இந்த மோசடிக்கு மூளையாக டார்ட்சே என்பதும் தெரிடய வந்துள்ளது. இவர் பீஹாருக்கு தப்பிச்சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக சீனா தப்ப திட்டமிட்டுள்ளதும் தெரிய வந்தது.

டார்ட்சே கைது
 

டார்ட்சே கைது

கடந்த சனிக்கிழமையன்று பீஹார் சென்ற அதிகாரிகள், டார்ட்சேவை கைது செய்துள்ளனர். ஜில்லியான் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்துக்கு டார்ட்சேவும், சீனாவைச் சேர்ந்தவரும் இயக்குனர்களாக இருப்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்டு உள்ள டார்ட்சேவின் ஆவணங்களில் அவர் ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி என்ற இடத்தைச் சேர்ந்தவர் என குறிப்பிடத்தக்கது.

அவ நம்பிக்கை

அவ நம்பிக்கை

கைது செய்யப்பட்டுள்ள டார்ட்சேவை மேற்கோண்டு டெல்லி அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மோசடியில் இன்னும் பல மோசடிகள் அமபலமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சீனா நிறுவனங்கள் பலவும் தொடர்ந்து வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டு வருவதும், அதனை அமலாக்க துறையினர் கண்டறிவதும் தொடர்கதையாகி வருகின்றது. இந்த நிலையில் சீன நிறுவனங்களின் இதுபோன்ற மோசடிகள் இன்னும் சீன நிறுவனங்கள் மீதான அவ நம்பிக்கையை அதிகரிக்க வழிவகுக்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Chinese companies in the name of Indian companies: mastermind arrested by SFIO

Chinese companies in the name of Indian companies: mastermind arrested by SFIO

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.