துபாய் நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த இன்டிகோ விமானத்தின் கழிவறை தட்டின் பின்புறம், பசை வடிவில் 740 கிராம் தங்கம் கடத்தப்பட்டு வந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு ரூ.33.15 லட்சம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் வந்திறங்கிய அஷ்பேக் ஹாசன் என்பவரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அவரின் மலக்குடலில் பசை வடிவில் பதுக்கி வைத்திருந்த தங்கம், உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த தங்கச்சங்கிலி ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மொத்தம் 1,249 கிராம் எடைக்கொண்ட தங்கத்தின் மதிப்பு ரூ.55.96 லட்சம் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு சோதனைகள் மூலம் மொத்தம் 1.989 கிலோ தங்கம் (மதிப்பு ரூ.89.11 லட்சம்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.