சில, பல ஆண்டுகளுக்கு முன்புவரை அலுவல்ரீதியான தகவல் தொடர்புக்கும், உறவுகளுக்கு இடையேயான தனிப்பட்ட உரையாடல்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த செல்ஃபோன், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்ஃபோன் என பெயர் மாற்றம் பெற்றுள்ளது.
இந்த பெயருக்கேற்ப ஒருவர் பேசுவற்கு மட்டுமின்றி யூடியூப், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வீடியோக்களை கண்டுக்களிப்பதில் தொடங்கி G pay,PhonePeஇல் பணபரிவர்த்தனை செய்வது வரை சகலமும் இன்று ஸ்மார்ட்ஃபோனை வைத்துதான்.
இதேபோன்று கார், ஆட்டோ ஸ்டாண்ட்களை பொதுமக்கள் தேடி சென்று தங்களது பயணத்தை தொடங்கிய காலம் மாறிப் போய், ஸ்மார்ட்ஃபோன் புக்கிங் மூலம் பயணிகளின் வீட்டு வாசலுக்கே கார் தேடி வந்து அலர்களை ஏற்றிச் செல்லும அளவுக்கு நவீனமாகிவிட்டது. கொரோனா பரவல் போன்ற அசாதாரண சூழல் நிலவும் காலங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் பாடங்கள் படிக்கவும் செல்ஃபோன்கள் பயன்படுகின்றன.
இவ்வாறு படிப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளில் முதல் யூடியூப் வீடியோக்களை கண்டுகளிக்கும் பொழுதுப்போக்கு வரை, ஸ்மார்ட்ஃபோன் அனைவரின் அன்றாட வாழ்விலும் ஓர் அங்கமாகிவிட்டது.
ஸ்மார்ட்ஃபோன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனேகமாக இன்று அனைவரின் கைகளிலும் செல்ஃபோன் உள்ளது. செல்ஃபோன் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது என்று சொல்லும்படி மனிதர்களை மொத்தமாய் அடிமைப்படுத்தி வைத்துள்ளது இந்த நவீன சாதனம்.
பிரிட்டன் அமைச்சரவையை அலங்கரிக்கும் தமிழ் பெண்…யார் இந்த சுயெல்லா?
தினமும் மணிக்கணக்கில் செல்ஃபோனை தொடர்ந்து பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு கண் பார்வை குறைபாடு, தலைவலி, மூளை நரம்புகள் பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் யாரும் செல்ஃபோன் பயன்பாட்டை குறைத்துக் கொள்வதாக தெரியவில்லை.
இந்த நிலையில், ஸ்மார்ட்ஃபோன் அடிமைகள் அதிர்ச்சி அடையும்படியான தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அமெரி்க்காவின் ஒரேகான் ஸ்டேட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
அளவுக்கு அதிகமாக டிவி, செல்ஃபோன், மடிக்கணினி போன்ற சாதனங்களை பயன்படுத்துவது, வயதாகும் செயல்முறையை வேகப்படுத்தும் என்று இந்த ஆய்வின் முடிவு எச்சரித்துள்ளது.
தினமும் இதை குடிக்கும் பழக்கம் இருக்கா? -அப்போ உங்களுக்கு ஆயுசு கெட்டி!
செல்ஃபோன், லேப்டாப், டிவி உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் இருந்து வெளியாகும் அளவுக்கு அதிகமாக நீல நிற கதிர்கள், மனித உடலின் செல்களை பாதித்து, வளர்ச்சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால்தான் மனிதனின் வயதாகும் செயல்முறை வேகப்படுத்தப்படுவதாக ஒரேகான் பல்கலைக்கழக ஆ்ய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
தூங்கும் நேரம் தவிர்த்து, எப்போதும் செல்ஃபோனும் கையுமாக இருப்பவர்கள், இந்த ஆய்வுக்கு முடிவுக்கு பிறகாவது செல்ஃபோனை அளவோடு பயன்படுத்தினால் நீண்ட நாட்கள் இளமையோடு இருக்கலாம். இல்லையெனில் முதுமை அவர்களை சீக்கிரம் தழுவும் அபாயம் உள்ளதாக அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.