சைவ உணவு பார்சலில் எலி தலை இருந்ததாக புகார் – அதிகாரிகள் ஆய்வு

ஆரணியில் சைவ உணவக பார்சலில் எலி தலை இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த சம்பவம் எதிரொலியாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகே ஸ்ரீபாலாஜி பவன் என்ற பெயரில் சைவ உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் நேற்று ஆரணி டவுன் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முரளி என்பவர் 35 பார்சல் சாப்பாடு வாங்கிச் சென்றுள்ளார்.
image
ஆனால் அந்த உணவுடன் கொடுத்த பொரியலில் எலி தலை இருந்ததாகக் கூறி சுமார் 25-க்கும் மேற்பட்டோர் உணவகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பொரியலில் எலி தலை இருந்ததாக எழுந்த புகாரின் எதிரொலியாக மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ராமகிருஷ;ணன் தலைமையில் அதிகாரிகள் சம்மந்தபட்ட உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
image
ஆய்வின் போது தேனீர் டீ ஸ்டாலில் எலி வந்து ஓடியதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் கூறும்போது… உணவுடன் வழங்கப்பட்ட பொரியலில் எலி தலை இருந்த சம்பவத்தில் ஆய்வின் போது எலி வர வாய்ப்புள்ளது. ஆனால் எலி அதே இடத்தில் தங்கும் அளவில் இல்லை. தற்போது உணவகத்திற்கு மனு 32 அளிக்கபட்டு உணவு தயார் செய்யும் இடத்தில் அடைப்புகள் ஏற்படுத்த அறிவுறுத்தபட்டுள்ளது. ஆரணி பகுதிக்கு தனி அதிகாரிகள் நியமிக்கபட்டுள்ளனர் என்றார் அவர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.