டெல்லியிடம் சரண் அடைய மாட்டேன் சரத் பவார் ஆவேசம்

புதுடெல்லி: ‘டெல்லி ஆட்சியாளர்களிடம் சரண் அடைய மாட்டேன்,’ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.தேசியவாத காங்கிரஸ் கட்சியின்  8வது தேசிய கூட்டம் டெல்லியில் நேற்று  நடந்தது. இதில், கட்சியின் தலைவர் சரத் பவார் பேசுகையில், ‘ஒன்றியத்தில் ஆட்சி நடத்தி வரும் பாஜ, அமலாக்கத் துறை, சிபிஐ போன்றவற்றை தவறாக பயன்படுத்தி வருகிறது. இதை எதிர்த்து போராட வேண்டும்.  சோனியா காந்தி, ராகுல் காந்தி, பரூக் அப்துல்லா, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், சஞ்சய் ராவுத், நவாப் மாலிக், அபிஷேக் பானர்ஜி, சத்யேந்திர ஜெயின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள்  ஒன்றிய ஏஜென்சிகளின் விசாரணை வளையத்தில் உள்ளனர். டெல்லி ஆட்சியாளர்களிடம் தேசியவாத காங்கிரஸ் சரண் அடையாது. பாஜ மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.