புதுச்சேரி: புதுச்சேரியில் ஆரோவில் சர்வதேச நகரில் இருந்து தமிழ்நாட்டில் இருந்து திருடி வைக்கப்பட்டிருந்த 20 சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிலைகளை மீட்கும் பணியில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஆரோவில்லில் மிழக கோவில்களில் இருந்து திருடப்பட்ட பல சிலைகள் இருப்பது தெரிய வந்தது. அதன்பேரில், அங்கு சென்று சோதனை நடத்திய தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு சுமார் 20 பழங்கால சிலைகள், கலைப்பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர். அதில், 17 சிலைகள் தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அநத சிலைகளை மீட்ட போலீசார் சிலைகள், கலைப்பொருட்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் பிரெஞ்சு நாட்டவருக்கு சொந்தமான இயற்கை எழில்கொஞ்சும் பகுதியான ஆரோவில் பெரும் புகழ்பெற்து. இந்த சர்வதேச நகரத்தில் உலகம் முழுவதிலிருந்தும் இருந்து 50,000 பேர்பட்டோர் வசித்து வருகின்றனர். மனிதஇன ஒற்றுமையை பரிசோதித்துப் பார்ப்பதற்காக இந்த இலட்சிய நகரம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.