நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் : சத்யராஜ் வேண்டுகோள்

நடிகர் சத்யராஜ் ஈரோட்டில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் அவர் அங்கு நிருபர்களிடம் கூறியதாவது: தற்கொலை தடுப்பு என்பது இன்றைக்கு மிகவும் அவசியமான விஷயம். தற்கொலைக்கு முக்கிய காரணம் வறுமை மற்றும் உறவு சிக்கல். சமூகம் தரும் மன அழுத்தம், மற்றும் பொருளாதார சிக்கல். நம் உடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மருத்துவர்களிடம் செல்கிறோம். ஆனால், மனநலம் குன்றினால் மட்டும் மருத்துவர்களிடம் செல்வதில்லை.

உலகில் யாரும் புத்திசாலி இல்லை. தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது. நடிகர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என நினைத்து கொண்டுள்ளனர். ஆனால், நடிகர்களுக்கு நடிப்பை தவிர வேறு எதுவும் தெரியாது. நடிகர்களை ஐன்ஸ்டீன் அளவுக்கு நினைத்துக் கொள்ளாதீர்கள். நடிகர்களின் படத்தைப் பாருங்கள், அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.