நடிகை மரண வழக்கு: சிபிஐக்கு மாற்றம்

பனாஜி: பாஜக பிரமுகரும், நடிகையுமான சோனாலி போகத் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பரிந்துரைத்துள்ளார். அரியானா பாஜக மூத்த பிரமுகரும் நடிகையுமான சோனாலி போகத், கோவாவின் அஞ்சுனா பகுதியிலுள்ள கர்லீஸ் விடுதியில் கடந்த 23ம் தேதி உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சோனாலி போகாத் பெற்றோர் முறையிட்டனர்.

இவ்வழக்கில் சோனாலி போகத் உடன் கோவாவிற்கு வந்த சுதீர் சாக்வன், சுக்வீந்தர் சிங் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில், குடிநீரில் விஷத்தை கலந்து, சோனாலியை குடிக்க வைத்ததாக அவ்விருவரும் ஒப்புக்கொண்டனர். இதனிடையே இவ்வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சோனாலி போகத் குடும்பத்தினர் வலியுறுத்தி வந்தனர். மேலும் அரியானா முதல்வரை சந்தித்தும் இதே கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர்.

இந்நிலையில் சோனாலி போகத் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பரிந்துரைத்துள்ளார். இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘கோவா காவல்துறையை நாங்கள் நம்புகிறோம். அவர்கள் நன்றாக விசாரணை செய்கிறார்கள். ஆனால் இது மக்களின் கோரிக்கை. அதனால் சிபிஐக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.