`காஃபி வித் காதல்’, `கோல்மால்’, `வரலாறு முக்கியம்’ உட்படச் சில படங்களில் நடித்து வரும் ஜீவா, விரைவில் ஆஹா தமிழ் ஓ.டி.டி-யின் கேம் ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கவிருக்கிறார். இதற்கான நிகழ்ச்சி ஒன்றில்தான் அடுத்த விஜய் பட அப்டேட் ஒன்றை, ஒரு தயாரிப்பாளராக அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
“என்னுடைய 20 வருஷ சினிமா பயணத்தில் ஒரு நல்ல விஷயம் பண்ணியிருக்கேன். பெரிய ஹிட் படங்கள், பிரமாண்ட கலெக்ஷன் கொடுத்திருக்கிறேனா தெரியல. ஆனா, நிறைய புது திறமைசாலிகளுடன் வேலை செய்யற வாய்ப்பு அமைஞ்சது. இப்பக்கூட நாலு படங்கள் முடிச்சிருக்கேன். அதுல ரெண்டு படங்கள் அறிமுக இயக்குநரின் படங்கள்.
எங்க அப்பாகிட்ட ஒருமுறை நீங்க இவ்வளவு இயக்குநர்களை அறிமுகப்படுத்திருக்கீங்க. பெரிய இயக்குநர்களின் கூட்டணியில் நிறைய படங்களை பண்ணியிருக்கலாமேன்னு கேட்டேன். அதுக்கு எங்க அப்பா சொன்ன பதில், இன்னும் என் ஞாபகத்துல இருக்கு. ‘சூப்பர் குட் நிறுவனம் புது இயக்குநர்களை அறிமுகப்படுத்தினதாலதான் இன்னைக்கு 96 படங்கள் வரை வளர்ந்திருக்கு’ன்னு சொன்னார்.
விரைவில் நூறாவது படத்தைத் தயாரிக்கிறோம். விஜய் சார் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் போயிட்டிருக்கு. போன வாரம்தான் விஜய்கிட்ட பேசினோம். எங்க அப்பாகிட்ட நானும் அந்தப் படத்தில் இருக்கணும்னு கேட்டிருக்கேன். கடவுள் அருளால் நூறாவது படத்துல விஜய் சார்தான் நடிப்பார். நிறைய பேர் என்கிட்ட ‘நீங்க சந்தானத்தோட நடிக்கும் போது மட்டும் எப்படி லோக்கல் ஸ்லாங்ல பிச்சு உதறீங்களே’ன்னு கேட்பாங்க. அதுக்கு காரணம் நானும் சென்னையில வளர்ந்தவன் என்பதுதான்.”
விஜய் இப்போது `வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து `விஜய் 67’ஐ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அதன் பிறகு `விஜய் 68′ படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது.