பெங்களூரு: பல்கலைக்கழக வளாகத்தில் பிள்ளையார் கோவில் கட்டுமானத்திற்கு சில மாணவர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளதால், கோவில் கட்டும்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. மாநகராட்சியின் நடவடிக்கைக்கு, காங்கிரஸ் எம்எல்ஏ பிரியங்க் கார்க்கும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
பெங்களூருவில் உள்ள பிபிஎம்பி பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான நிலத்தில், அந்த பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பெருநகர பெங்களூரு மாநகராட்சி பிள்ளையார் கோவிலை கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு பல்கலைக்கழகத்தில்பிடிக்கும் சில மாணவர்கள் மற்றும் சி ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் விநாயகர் கோவில் கட்டும் போராட்டம் காவி மயமாக்கல் என கூறி சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த கோவல் சட்டவிரோதமாக இந்த பிள்ளையார் கோவிலை கட்டி வருவதாகவும், இதனால் தங்களின் படிப்புச்சூழலில் பாதிப்பு ஏற்படும் எனவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். யுஜிசி வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, பல்கலைக்கழகம் கல்வியைத் தொடர ஒரு இடம் என்றும் வலியுறுத்தும் மாணவர்கள், பல்கலைக்கழகம் மதத்தைப் பின்பற்றுவதற்கு அல்ல என்றும் மாணவர்கள் தெரிவித்தனர். “பிபிஎம்பி பல்கலைக்கழகத்தை காவி நிறமாக்க முயற்சிக்கிறது மற்றும் கோயிலுக்கு பணம் செலவழிக்கிறது”, என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். மாநகராட்சியின் நடவடிக்கைக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்த மாணவர்கள் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், கோவிலின் கட்டுமானத்தை நிறுத்திய பல்கலை., நிர்வாகம், இதுபோன்ற விவகாரங்களில் மாணவர்களிடம் கலந்தோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுனா கார்கேவின் மகனும், கல்புர்கி எம்எல்ஏ பிரியங்க் கார்கே கூறுகையில்,”தங்களுக்கு வசதியான உள்கட்டமைப்பும், தரமான நூலகமும் வேண்டும் என பெங்களூரு பல்கலை., மாணவர்கள் ஒன்றிணைந்து கூறுகின்றனர். மேலும், மதம் சார்ந்த நிகழ்வுகள் தங்களின் பல்கலைக்கழக்கத்தில் தேவையில்லை என்றும் கூறுகின்றனர். ஆனால், யாரிடமும் ஆலோசிக்காமலும், வழிமுறைகளை முறையாக பின்பற்றாமலும் அரசு தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளது” என்று குற்றம் சாட்டியவர், ,”கடந்த 3 ஆண்டுகளில் பாஜக அரசு மாநிலத்தில் எதையும் செய்யவில்லை. பெங்களூருவில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதில் முழுவதுமாக தான் தோல்வியடைந்துவிட்டதாக முதல்வர் பசவராஜ் பொம்மை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனாலும், பெங்களூரு நடப்பவை அத்தனைக்கும் காங்கிரஸ் மீதே அவர் பழி சுமத்தி வருகிறார் என்று கூறினார்.