இந்தியாவின் மிகப் பெரிய தண்ணீர் பாட்டில் நிறுவனமான பிஸ்லரி பங்குகளை டாடா குழுமம் வாங்க உள்ளதாக செப்டம்பர் 12-ம் தேதி வெளியாகியுள்ள தகவல்கள் கூறுகின்றன.
பிஸ்லரி நிறுவனத்துக்கு இணையாக டாடா குழுமம் பங்குகளை வாங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த பரிவர்த்தனை நடைபெற்றால் டாடா குழுமத்திற்கு தண்ணீர் வர்த்தகத்தில் மிகப் பெரிய வாய்ப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
பிஸ்லெரி இண்டர்நேஷனல் பங்குகள்.. டாடா குழுமம் எடுத்த அதிரடி முடிவு!

டாடா காப்பர்+
டாடா குழுமம் ஏற்கனவே டாடா கப்பார்+ என்ற சுத்திகரிக்கப்பட்ட மினரல் வட்டர் நிறுவத்தை இயக்கி வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் மிகப் பெரிய தண்ணீர் நிறுவனமான பிஸ்லரி பங்குகளை டாடா வாங்க உள்ளது.

டாடா குழுமம்
டாடா குழுமத்துக்குச் சொந்தமாக ரீடெயில் நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், விமான சேவை நிறுவனங்கள் என பல உள்ளன. இந்த பரிவர்த்தனை வெற்றிகரமாக நிறைவேறினால் இங்கு எல்லாம் பிஸ்லரி தண்ணீர் பாட்டிலுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

என்ன விலை?
டாடா குழுமம் பிஸ்லரி பங்குகளை வாங்குவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தாலும் அந்த பங்குகளின் விலை எவ்வளவு போன்ற விவரங்கள் தெரியவில்லை.

பிஸ்லரி
இந்தியாவில் பிஸ்லரி இண்டர்னேஷனல் நிறுவனத்துக்கு 150 தொழிற்சாலைகள் உள்ளன. 4000-க்கும் மேற்பட்ட வினியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். 5000 டிரக்குகள் உள்ளன என அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் வணிகம்
இந்தியாவில் பேக் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் தண்ணீர் பாட்டில் சந்தையின் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய். அதி 60 சதவீதம் ஒழுங்கமைக்கப்படாத நிறுவனங்கள் வசம் உள்ளது. அதில் பிஸ்லரி வசம் 32 சதவீதம் உள்ளது.

டோர் டெலிவரி
பிஸ்லரி நிறுவனத்துக்கு Bisleri@Doorstep என்ற செயலி உள்ளது. இந்த செயலி மூலம் 20 லிட்டர் தண்ணீர் கேன், 250 மில்லி தண்ணீர் பாட்டில், 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் போன்றவற்றை வீட்டிற்கே டெலிவரி செய்யும் சேவையையும் பிஸ்லரி வழங்கி வருகிறது.
Tata To Buy Stake In Bisleri International
பிரபல தண்ணீர் நிறுவன பங்குகளை வாங்கும் டாடா குழுமம்.. என்ன விலை தெரியுமா? |Tata To Buy Stake In Bisleri International